நாடாளுமன்ற தேர்தலின் முடிவுகள் நெருங்குவதை தொடர்ந்து பாஜக தன்னுடைய தோல்வி பயத்தை வன்முறையாக வெளிபடுத்திவருகிறது.
ராபரேலி மாவட்ட பஞ்சாயத்து தலைவரான அவதேஷ் சிங்கிற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டதை தொடர்ந்து, காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஆதிதி சிங் சென்று கொண்டிருந்த கார் மீது சில அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.
அதிதி சிங்கின் காரை தொடர்ந்து ஒரு கும்பல் சுட்டதால் ரேபரேலியின் ஹர்சந்த்புர் பகுதியில் அவரது வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
அவதேஷ் சிங்கின் கைகூலிகள் இரும்பு கம்பிகளாலும், செங்களாலும் அவரது வாகனத்தைத் தாக்கியதால் அவர் அருகில் இருந்த மருத்துவமனையில் அழைத்துச் செல்லப்பட்டாள்.
இந்தத் தாக்குதல் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் உத்தரவின் பேரில் நடத்தப்பட்டதாகவும் அதிதி சிங் குற்றம்சாட்டியுள்ளார். பின்னர் காங்கிரஸ் எம்.எல்.சி தீபக் சிங் மற்றும் உள்ளூர் எஸ்.பி, எம்.எல்.ஏ. மனோஜ் பாண்டே ஆகியோர் இந்த சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.
“ராபரேலி தொகுதியில் காங்கிரஸ் எம்.எல்.ஏ மீது நடத்திய கொடூரமான தாக்குதல் மாநிலத்தின் சட்டம் மற்றும் ஒழுங்கு நடவடிக்கைகள் எந்த அளவுக்கு உள்ளது என்பதை நீங்களே கவனியுங்கள். இங்கு ஒரு எம்.எல்.ஏ. பாதுகாப்பும், உ.பி. மக்களின் பாதுகாப்பு மோசமான உள்ளது” என்று உ.பி. காங்கிரஸ் ட்வீட் செய்திருந்தது. .
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பு தற்போது விசாரித்துவருகிறது.