தான் எந்த ஒரு அதிசயத்தையும் வரும் இரண்டு மாதங்களில் எதிர்பார்க்கவில்லை, எனவே 2022 உத்திர பிரதேச மக்களவை தேர்தலில் கவனம் செலுத்துமாறு காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தனது தங்கையும் கிழக்கு உத்திர பிரதேச காங்கிரஸ் பொதுச் செயலாளருமான பிரியங்கா காந்தியிடமும் மற்றும் மேற்கு உத்திர பிரதேச காங்கிரஸ் பொதுச் செயலாளர் சிந்தியாவிடமும் கூறியுள்ளார்.

 

கடந்த வியாழக்கிழமை நடந்த காங்கிரஸ் கட்சி சந்திப்பில் மாநில பொதுச் செயலாளர் மற்றும் மாநிலங்களின் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். இச்சந்திப்பின்போது நாடாளுமன்ற தேர்தலின் வேட்பாளர்களை தீர்மானிக்க நடந்தது.

 

“நாங்கள் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள தயாராக உள்ளோம்” என்று கூறிய ராகுல் தனது கட்சி சார்பாக இருமுறை நின்றும் தோல்வியுற்றவர்களுக்கு பதிலாக புது முகங்களை தேர்வு செய்யுமாறு  அதிகாரிகளை வலியுறுத்தி உள்ளார் .

 

உத்திர பிரதேசத்தில் “பிரிவினை மற்றும் சாதி அரசியலை” முடிவுக்கு கொண்டு வருவதற்காக  காங்கிரஸ் தலைவர்களுடன் ஒத்துழைக்க பிரியங்கா காந்தி சபதம் எடுத்துள்ளார் எனவும் பிரியங்கா மற்றும் சிந்தியவிடம் 2022 நடக்கவிருக்கும் உ.பி  மக்களவை தேர்தலில் மிகவும் கவனம் செலுத்துமாறு ராகுல் வலியுறுத்தியுள்ளார்.