நெகோம்போவிலுள்ள மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரியில் அத்துமீறி நுழைந்ததற்காக, இந்தியாவில் உள்ள ராய்ட்டர்ஸ் புகைப்படச் செய்தியாளர் டேனிஷ் சித்திக் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார். அவரை நெகோம்போ நீதிபதி 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார்.
நாங்கள் எவ்வளவோ தடுத்தும் அவர் எங்கள் வளாகத்தில் கட்டாயமாக நுழைய முற்பட்டார் எனக் காவல் துறையிடம் மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரியின் முதல்வர் தெரிவித்தார்.
ஏப்ரல் 21 ம் ஆம் தேதி கட்டுவாபிட்டியாவிலுள்ள செயின்ட் செபாஸ்ட்டியன் தேவாலயம் குண்டுவீச்சில் கொல்லப்பட்ட ஒரு மாணவர் பற்றி அக்கல்லூரி அதிகாரிகளுடன் பேசுவதற்காகவே சித்திக் முயற்சி செய்தார். என கொலும்பா கஸேட் பத்திரிக்கை தெரிவிக்கிறது.
கடந்த ஈஸ்டர் ஞாயிறு அன்று ஸ்ரீலங்காவில் தேவாலயங்களிலும் நட்சத்திர விடுதிகளிலும் நடந்த குண்டுவெடிப்பில் 300க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இதனால் அங்கு கடும் பதட்டம் நிலவுகிறது. தீவிரவாத அமைப்பான ஐ.எஸ் இதற்கு பொறுப்பேற்றுள்ளது. உள்ளூர் தீவிரவாத இயக்கங்களான தேசிய தௌஹீத் ஜமாத் மற்றும் ஜம்மியத்துல் மல்லத்து இப்ராகிம் போன்றவையும் இக் குண்டுவெடிப்பில் சம்பந்தப்பட்டிருக்கலாம் எனக் கடந்த வாரம் அவை தடை செய்யப்பட்டன.
மியான்மரைச் சேர்ந்த ரோஹிங்யா சிறுபான்மையினர், சமூகத்தால் எதிர்கொண்ட வன்முறைகளைப் பற்றியும் பங்களாதேஷுக்கு அவர்கள் பெருமளவில் தஞ்சம் புகுந்ததையும் புகைப்பட ஆவணம் செய்ததற்காக புலிட்சர் பரிசு வென்ற ஏழு உறுப்பினர் அடங்கிய ரௌவ்டர்ஸ் அணியிலுள்ள இரண்டு இந்தியர்களில் சித்திக்கும் ஒருவர்.