மக்கள் மனதில் எப்படியெல்லாம் தாமரை சின்னத்தையும் காவி நிறத்தையும் பதியவைக்கலாம் என்ற முழுமுயற்சியில் இறங்கியுள்ளது பாஜக.
வாரம் ஒருமுறை அரசியல் ஸ்டண்ட் அடித்துக்கொண்டு நாடகமாடிக்கொண்டிருக்கும் மோடி ஒருபுறம் என்றால், அவரது காவிப்படை மற்ற வழிகளில் மக்களின் கவனத்தை திசைதிருப்பும் முயற்சியில் இறங்கியுள்ளது.
ஏற்கனவே மோடி படத்துடன் ரயில்வே டிக்கெட் விற்பனையைச் செய்ததை திரிணாமுல் காங்கிரஸ், கண்டித்ததால் உடனடியாக டிக்கெட்டில் இருந்து மோடியின் புகைப்படம் நீக்கப்பட்டது.
மேலும் மோடியின் வலியுறுத்தலின் பேரில் பாஜக முன்னணி தலைவர் தங்கள் பெயரின் முன் செளகிதார் என்ற அடைமொழியை இணைத்துக்கொண்டார்கள். இந்நிலையில் “மெயின் பிஹி செளகிதார்” என்ற வாசகம் இடம்பெற்ற டீ-கப் இந்திய ரயில்வே துறையைச் சேர்ந்த காட்ரிங் சர்வீஸ் மூலம் ரயில் பயணிகளுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இதை ரயில் பயணம் செய்த ஒருவர் சமூக வலைதளங்களில் பகிர்ந்ததால் பலரின் கவனம் பெற்று அந்த வாசகத்தை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ரயில்வே துறை கூறுகையில், எந்தவித முன் அனுமதி இன்றி இந்த வாசகம் இடம் பெற்றுள்ளது, ஒருமுறை மட்டுமே உபயோகப்படுவதால் மற்ற விஷயங்களை கவனித்தோம் ஆனால் இதை கவனிக்கவில்லை. இதை ஆச்சிடுவதற்கு முன் எங்களிடம் எந்த அனுமதியும் பெறவில்லை. இனிமேல் டீகப்பில் இந்த வாசகம் இடம்பெறாது எனவும் ரயில்வே துறை அறிவித்துள்ளது.