ராஜஸ்தானில் தற்போது 351 அடி உயரத்தில் சிவன் சிலை உருவாக்கப்பட்டு வருகிறது. உலகிலேயே மிகவும் உயரமான சிவன் சிலை என்ற பெருமையை இச்சிலை அடைகிறது.

கடந்த ஆண்டு குஜராத்தில் மிகப்பெரிய சர்தார் வல்லபாய் பட்டேல் சிலை திறந்து வைத்தது பாஜக அரசு. 82 மீட்டர் (600 அடி) உயரம் கொண்ட இந்த சிலை உலகின் உயரமான சிலை என்று கூறப்படுகிறது. இதையடுத்து, தற்போது ராஜஸ்தான் மாநிலத்தில் உலகின் மிகப்பெரிய சிவன் சிலை ஒன்று உருவாக்கப்பட்டுவருகிறது.

ராஜஸ்தானில் உள்ள நதட்வாரா என்ற பகுதியில் இச்சிலை தற்போது உருவாகி வருகிறது. 351 அடி உயரத்தில் 2,500 டன் ஸ்டீல் கொண்டு இச்சிலை தயாராகி வருகிறது. இதில் சிவன் உருவத்தின் தோள் பகுதி வரையிலான உயரம் மட்டும் 260 அடி. 20 அடி உயரத்தில் 3 பார்வை மாடங்கள், லிஃப்ட் எனப் பல கட்டுமான வசதிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

கடந்த 2013ஆம் ஆண்டு ஏப்ரல் 17ஆம் தேதி உருவான இத்திட்டம் வருகிற ஆகஸ்ட் மாதம் நிறைவடையும் எனக் கூறப்படுகிறது.