தமிழ்நாட்டிற்கு குறிப்பாக சென்னைக்கு இந்திய பிரதமர் மோடி வரப்போவதாகத் தெரிந்தால் டிவிட்டர் மற்றும் மற்ற சமூக வலைதளங்களில் gobackmodi என்ற ஹாஷ்டேக் ட்ரெண்டிங்காவது வழக்கம். சீன அதிபர் ஷி ஜின்பிங் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மாமல்லபுரத்தில் இன்று(11.10.2019) சந்திக்கவிருக்கும் சூழலில், மீண்டும் #gobackmodi இந்திய அளவில் மீண்டும் ட்ரெண்டிங்கில் இடம் பெற்றுள்ளது.
சீன அதிபரின் வருகையால் gobackmodi என்பது சீன மொழியிலும் ட்ரெண்டாகி வருகிறது. கூகுள் ட்ரான்ஸ்லேட்டரில் gobackmodi என்பதற்கான சீன மொழி பதிவை ஹாஷ்டேகில் பயன்படுத்தி வருகின்றனர்.
2019 மக்களவைத் தேர்தலுக்கு முந்தைய சமயத்தில் மோடி இந்தியா வந்திருந்தபோதும் இந்த ஹாஷ்டேக்குகள் ட்ரெண்டானது. கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி சென்னை ஐஐடி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்திற்கு வருகை தந்திருந்தார். அப்போது சுமார் 10,000 ட்வீட்டுகளில் ஆரம்பித்த #gobackmodi மதியத்திற்குப் பிறகு உலகளவில் ட்ரெண்டிங் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்தது.
இந்நிலையில் Go back modi என்ற ஹாஷ்டேகில் பதியப்பட்ட ட்வீட்டுகளில் சிலர் நாங்கள் goback modi என்று பதிவிட்டாலும் சீன அதிபர் ஷி ஜின்பிங்கை வரவேற்கிறோம் என்றும் கூறியுள்ளனர்.