ஹிமாச்சல பிரதேசத்தில் நடைபெற்ற கட்டட சரிவில் 13 ராணுவ வீரர்கள் உட்பட 14 பேர் பலியாகியுள்ளனர்.
ஹிமாச்சல பிரதேசத்தின் தலைநகர் ஷிம்லாவில் இருந்து 45 கிலோமீட்டர் தொலைவில் சோலன் என்ற பகுதியில் அமைந்துள்ள பல அடுக்குமாடி கட்டடம் ஒன்று நேற்று (ஜூலை 14) மாலை 4 மணியளவில் கனமழை, காரணமாக திடீரென இடிந்து விழுந்தது. இந்தக் கட்டிடத்தில் ராணுவ வீரர்கள் 30 பேர் உள்பட சில பொதுமக்களும் சிக்கியிருந்ததாக இருந்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து, தேசிய பேரிடர் மீட்பு படையினர் தலைமையில் மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டு ஜேசிபி எந்திரம் மூலம் கவனமான இடிபாடுகள் அகற்றப்பட்டு மீட்பு பணி நடைபெற்றது. இதுவரை மொத்தம் 14 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. அவர்களில் 13 பேர் ராணுவ வீரர்கள். 17 ராணுவ வீரர்கள் உள்பட 28 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். ஹிமாச்சலப் பிரதேச முதலமைச்சர் ஜெய்ராம்தாக்கூர் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.