2019 மக்களவை தேர்தலை முன்னிட்டு உத்தரகாண்ட் மாநிலத்தில் தார்சூலாவிலிருந்து காதிமா வரை உள்ள இந்திய- நேபாள எல்லைப் பகுதிகளுக்கு சீல் வைக்கப்பட உள்ளதாக இந்தியா-நேபாள ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
சம்பாவாட்டில் நேற்று இந்தியா-நேபாள ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நடைபெற்றது. அப்பொழுது சில முடிவுகள் எடுக்கப்பட்டது. இதுகுறித்து உயர் அதிகாரிகள் கூறுகையில், ”இந்தியா முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளதால் தார்சூலாவிலிருந்து காதிமா வரை உள்ள நேபாளப் பகுதிகள் மூடப்பட உள்ளன. ஏப்ரல் 9-ம் தேதி நள்ளிரவில் இருந்து ஏப்ரல் 11 அன்று 8 மணி வரை 68 மணி நேரம் எல்லை முற்றிலுமாக சீல் வைக்கப்பட உள்ளதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது. எனினும் இவ்விரு நாடுகளைத் தவிர மூன்றாவது நாட்டிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கும் நோயாளிகளுக்கும் இது பொருந்தாது” என்றனர்.
இந்தியாவையும் நேபாளத்தையும் இணைக்கும் இடங்களான தர்சூலாவிலிருந்து காதிமா வரை 300 கிலோ மீட்டருக்கு தங்களது எல்லைப்பகுதிகளை வரையறுத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.