இன்று காலை தொடங்கி பிறபகல் வரை இலங்கை தலை நகர் கொழும்புவில் இரண்டு தேவாலங்களிலும் மூன்று நட்சத்திரவிடுதிகளிலும் நடந்த எட்டு தொடர் குண்டு வெடிப்புகளில் 187 பேர் பலியாகியுள்ளதுடன் 500க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இன்று காலை கொழும்பு கொச்சிக்கட புனித அந்தோணியார் தேவாலயத்தில் முதல் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. மற்றொரு குண்டுவெடிப்பு புனித செபஸ்டியான் தேவாலயத்தில் நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து ஷாங்க்ரி லா, சின்னமோம் க்ரான்ட், கின்ஸ்பரி ஆகிய நடசத்திர ஹோட்டல்களில் குண்டு வெடிப்புகள் நிகழ்ந்ந்தன.
இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே ’ உண்மைக்கு புறம்பான வதந்திகளை பரப்பவேண்டாம் ’’ என வேண்டுகோள் விடுத்துள்ளார். இலங்கையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளது. சமூக வலைத்தைளங்களுக்கு தடை விதிக்கபட்டுள்ளது.
இதற்கிடையில் AFP செய்தி நிறுவனம் கடந்த ஏப்ரல் 11 ஆந்தேதி வெளீயிட்டுள்ள செய்தியில் ‘ இலங்கையின் காவல்துறை தலைவர் புஜுத் ஜெயசுந்தரா காவல்துறை உயரதிகாரிகாரிகளுக்கு அனுப்பிய அறிக்கையில் தற்கொலைப் படை பயங்கரவாதிகள் முக்கியமான தேவாலயங்கள் மற்றும் கொழும்பில் உள்ள இந்திய தூதரகத்தை தாக்க திட்டமிட்டிருப்பதாக ஒரு அயலக உளவுத்துறை எச்சரித்திருப்பதாக ’ தெரிவிக்கிறது.