மோடிக்கு எதிராக வாரணாசி தொகுதியில் போட்டியிட இருக்கும்  தேஜ் பகதூர் யாதவுடனான நேர்காணல்:

எதற்காக நீங்கள் மோடிஜிக்கு எதிராக வாரணாசியில் போட்டியிட நினைத்தீர்கள்?

நான் மோடிஜிக்கோ அல்லது பாரதி ஜனதா பார்டிக்கோ, ஏன் நான் யாருக்கும் எதிராகத் தேர்தலில் நிற்கவில்லை. ஒட்டுமொத்த வழக்கமான அமைப்பிற்கு எதிராகப் போட்டியிட விரும்புகிறேன்.

மோடியின் கை ஓங்கும் முன்பே அதாவது அவர் அரியணைக்கு ஏறுவதற்கு முன்பே, அவர் நம் நாட்டின் அரசியலை வைத்து ராணுவத்தோடு விளையாடிக்கொண்டிருந்தார். நம் நாட்டின் ராணுவத்துறை மிகுந்த பாதுகாப்போடு பல சாதனைகளைத் தன்வசம் கொண்டிருந்தது, ஆனால் மோடி அதை அரசியல் ஆதாயம் தேடுவதற்காகப் பயன்படுத்திக்கொண்டார்.

நாய்க் ஹெம்ராஜ் என்பவர் 2013ஆம் ஆண்டு இந்திய – பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் கொல்லப்பட்டபோது மோடியின் குரல் முழுமையாக எப்படி இந்த விஷயத்தில் தலையிட்டது. இந்திய நாட்டு மக்களுக்கு மோடி, இச்செயல் முழுக்க முழுக்க என்னால்தான் நடந்ததுபோல் காட்டிக்கொண்டார், என்னுடைய ஆளுமை திறனும் நமது நாட்டு ராணுவத்தை நிர்வகிக்கும் முறையும்தான் இதற்குக் காரணம் என்பதுபோல் இருந்தது அவரது அப்போதைய நடவடிக்கைகள்.

ஆனால் நடந்தது என்னமோ அதற்கு நேர்மாறானது. அவர் பிரதமரான பிறகு ஏற்பட்ட ராணுவ வீரர்கள் உயிர் இழப்பதானது கடந்த 10 ஆண்டுகளில் இறந்த ராணுவ வீரர்கள் உயிர் இழப்பிற்குச் சமம். அதைவிட முக்கியமானது எந்தத் தொலைக்காட்சியும் எந்தப் பத்திரிகையாளர்களும் கவனிக்கப்படாத சம்பவம் பல நடந்தேறியிருக்கின்றன. கடந்த ஆண்டு மட்டும், 997 துணை ராணுவப்படை வீரர்கள் தற்கொலை செய்துகொண்டனர். கண்டிப்பாக மோடிதான் அதற்குப் பொறுப்பேற்க வேண்டும்.

கடுமையான முறையில் ராணுவ வீரர்கள் கட்டுக்குள் வைத்திருக்க முற்படுகிறது மோடி ஆட்சி. சரியான உணவு அளிப்பதில்லை, ஸ்மார்ட் ஃபோன் உபயோகிக்க கூடாது, நேரக் கட்டுப்பாடு உள்ளிட்ட பல விதிமுறைகள் ராணுவ வீரர்கள்மீது ஏன் திணிக்கப்பட வேண்டும்?

ஓய்வூதியங்கள், பணியிலிருக்கும்போதே உயிரிழந்த வீரர்களுக்கு விருதளிப்பது, முகாம் வீரர்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்து தருவது உள்ளிட்ட பல கோரிக்கைகளில் ஒன்றுகூட நிறைவேற்ற வில்லை மோடி. யாருமே எங்களைப் பற்றிச் சிந்திக்க நேரம் ஒதுக்கவில்லை. யாருமே இதைப்பற்றியெல்லாம் பேசவில்லை. நாங்கள்தான் இதைப் பற்றி உரக்க பேசப்போகிறோம். ஜவான்களின் (இந்திய ராணுவ வீரர்) மகிழ்ச்சியே ஒட்டுமொத்த இந்திய நாட்டின் மகிழ்ச்சியும் அதை இந்திய நாட்டுமக்கள் உணர வேண்டும்.

நீங்கள் வழக்கமான அமைப்பிற்கு எதிராகப் போராடப்போகிறீர்கள் எனில் ஏன் தேர்தலில் நிற்க வேண்டும்? ஏன் மோடிக்கு எதிராக நிற்க வேண்டும்? நீங்கள் எந்தத் தொகுதியில் வேண்டுமானாலும் நிற்கலாம் அல்லவா?

மோடிதான் இதை முதலில் ஆரம்பித்தார், ஜாவன்களை வைத்து விளையாட ஆரம்பித்ததே அவர்தான். எனவே ஜாவன்களே அவருக்கு எது அரசியல் எனக் கற்றுக்கொடுக்கப்போகிறோம். இந்தக் காரணங்களால்தான் நான் அவருக்கு எதிராகப் போட்டியிடப்போகிறேன்.

நீங்கள் சொன்னதுபோல் உங்களுடன் 50,000 ஓய்வுபெற்ற ராணுவ வீரர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்கிறார்களா?

எங்களிடம் 10000 பேர் இருக்கிறார்கள், அதேசமயம் 50,000 வீரர்கள் எங்களுக்கு ஆதரவாக உள்ளனர். எங்களுக்குத் தேவையான சில அடிப்படை வசதிகள்கூட கிடைக்கவிடாமல் பலர் தடுக்கின்றனர். நாங்கள் அரசியல்வாதிகள் இல்லை எங்களிடம் பணமும் இல்லை.

முகாம்களில் இருந்துகூட உங்களுக்கு ஆதரவு கிடைக்கிறதா?

துணை ராணுவ வீரர்களின் ஆதரவு கண்டிப்பாக எங்களுக்கு உண்டு.

நீங்கள்கூட முகாம்களில் தங்கியிருந்த வீரர்தான், மோடியின் ஆட்சியில் உங்களது வேலை நேரங்கள் மற்றும் தங்குவசதிகள் எந்த அளவிற்கு இருந்தது?

நான் ஏற்கனவே சொன்னதுபோல் எங்களையாருமே கண்டுகொள்ளவில்லை. என்னுடைய 21 வருட அனுபவத்தில் நிறைய அரசு அதிகாரிகள் வந்துபோய் உள்ளனர். முதல்முறையாக அடெல்பிகாரி வாஜ்பாய்தான் எங்களது ஓய்வூதியத்தை நிறுத்தினார். ஆனால் ஆட்சியாளர்கள் மாறினாலும் எங்களது நிலை மட்டும் இன்னும் மாறவில்லை. மோடி ஆட்சியில் இன்னும் மோசமாகவிட்டது. ஜனநாயகம் செத்துப்போயிவிட்டது. அதிகாரத்திற்கு எதிராக எப்போது ஒரு சிறு குரல் ஒலிக்கிறதோ அதை அடியோடு அழிக்கும் வேலையில் மோடி ஆட்சி உள்ளது.

சமீபத்தில் யோகி ஆதித்யநாத் மற்றும் அப்பாஸ் நக்வி கூறியதுபோல் ‘மோடியின் ராணுவம்தான்’ இந்த வான்வழி தாக்குதலை நடத்தியதா?

யோகி ஆதித்யநாத் கூறியது ‘மோடியின் ராணுவம்’. மோடி ராணுவத்தை மிக எளிதாகக் கையாளுவதாக கூறுகிறார். இந்திய ராணுவம் முழுக்க அவரின் கட்டுப்பாட்டில் இருக்கிறதென்று நினைக்கிறீர்களா? அவர் எப்போதெல்லாம் கட்டளையிடுகிறாரோ அப்போதெல்லாம் பாகிஸ்தான்மீது தாக்குதல் நடைபெறும். அதேபோல் எப்போதெல்லாம் தாக்குதல் வேண்டாம் என்கிறாரோ அப்போதெல்லாம் நம் நாட்டு வீரர்கள் கொல்லப்படுவார்கள்.

மோடி மற்றும் ஆதித்யநாத்தும் கொடுங்கோல் ஆட்சியை நடத்திக்கொண்டிருப்பதாக மக்களிடையே உணர்த்துகிறார்கள். இங்குச் சுதந்திரமே இல்லை.

எப்படி உங்களது பிரச்சார செலவைச் சமாளிக்கிறீர்கள்?

என்னுடைய பேடிஎம் நம்பரை நான் சமூக வலைதளங்களில் பதிவேற்றியுள்ளேன். யாராவது எங்களுக்கு உதவ நினைத்தால் அந்த நம்பருக்கு பணம் போடுவார்கள்.

உங்களது ராணுவ முகாம் வாழ்க்கை எப்படி இருந்தது?

நான் மிகுந்த உற்சாகத்தோடு பணியில் சேர்ந்தேன். நம் நாட்டுக்குச் சேவை செய்யபோகிறோம் என்று உணர்ந்தேன். ஆனால் நான் எப்போது இந்தக் கேடுகெட்ட அமைப்பில் மூழ்கினேனோ அப்போதே ஒரு சிறையில் அடைப்பட்டதுபோல் ஆகியது என்னுடைய வாழ்க்கை.

புல்வாமா தாக்குதல் மற்றும் பாலாகோட் வான்வழி தாக்குதலில் உங்களது நிலைபாடு என்ன?

இந்த அரசாங்கம் மிகப்பெரிய தவறு செய்திருக்கிறது. அதை அரசியல்வாதிகள் கண்டுக்கொள்ளாமல் இருக்கின்றனர். இந்திய ராணுவத்தை அரசியலில் எந்த அளவுக்கு பயன்படுத்த முடியுமோ அந்த அளவுக்கு நமது அரசாங்கம் பயன்படுத்திக்கொண்டது. இதுபோல் வேறெங்கு நடக்கக் கூடாது.

முன்னாள் ராணுவ அதிகாரி வி.கே.சிங் மோடிஜீயின் ராணுவத்தைப் பற்றிப் பேசுபவர்கள் எல்லாம் துரோகிகள் என்கிறார், நீங்கள் அதை ஏற்றுக்கொள்கிறீர்களா?

ஆமாம், சரியாகச் சொன்னார். வி.கே.சிங்கூட யோகி ஆதித்யநாத்தின்மீது புகார் அளித்துள்ளார்.

மற்ற கட்சியின் ஆதரவு கிடைக்கிறதா?

ஆம் அத்மி பார்ட்டி எங்களுக்கு ஆதரவு தருவதாகக் கூறியது ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக வில்லை. நாங்கள் சமாஜ்வாதி கட்சியைத் தொடர்புகொண்டோம், அகிலேஷ்ஜியுடன் கேட்டுள்ளோம். சுஹேல்தேவ் பாரதி சமாஜ்வாதி பார்டி எங்களுக்கு ஆதரவு தருவதாகக் கூறியுள்ளது.

உங்களுக்கு வரணாசியின் மக்களின் ஆதரவு கிடைக்குமென்று நினைக்கிறீர்களா?

வரணாசி மக்களைச் சந்தித்த பிறகு எங்களுக்குள் நம்பிக்கை பிறந்துள்ளது. ஒருவேளை மோடிஜீ பெருவாரியான வாக்குவித்தியாசத்தில் தோற்ப்பார்.

உங்களுக்கும் மோடிக்கும் என்ன வித்தியாசம் இருப்பதாக நினைக்கிறீர்கள்? எதைப் பொருத்து உங்களின் வெற்றி தோல்வி அமையும்?

மிகப்பெரிய வித்தியாசம் யார் உண்மையான பாதுகாவலன் என்பதுதான். என்னுடைய தேர்தல் பிரச்சார வாசகமே இதுதான். இந்தத் தேர்தல் உண்மையான பாதுகாவலனுக்கு பொய்யனா பாதுகாவலனுக்கு இடையே நடக்கும் தேர்தல்.

ஆங்கிலத்தில்: https://thewire.in/politics/bsf-tej-bahadur-yadav-narendra-modi

பேட்டி எடுத்தவர்: ரிஸாவனா தபஸ்மம்

நன்றி:The Wire
தமிழில்:சந்தோஷ்