குஜராத் முஸ்லிம் அழித்தொழிப்பில் மறக்க முடியாத காட்சி அது: இரும்புத் தடி ஏந்தி நிற்கும் ஒரு வெறி கொண்ட மனிதனின் புகைப்படம். பின்னால் பற்றி எரியும் வன்முறையின் காட்சிகள். கையில் சூலம் ஏந்தி நிற்கும் வெறியர் கூட்ட படங்களையும் பார்த்திருக்கிறோம். இப்போது தில்லியில் ஏந்தி நிற்கிறார்கள், துப்பாக்கியை. அச்சுறுத்தலாகக் கருதும் பிரிவினரை அழித்தொழிப்பதில் இந்தியாவின் சாவர்க்கர் பாணி தீவிர இந்துத்துவா மிக வேகமாக நவீனமாகி வருகிறது. முதலில் சூலம் இப்போது துப்பாக்கி. தில்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சி.ஏ.ஏ) எதிர்த்துப் போராடியவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் இறந்தவர்கள் எண்ணிக்கை 47 ஆக உயர்ந்துள்ளது. அதில் பாதிக்கும் மேல் தோட்டாக்களின் காயத்தால் உயிரிழந்தவர்கள். 80 பேருக்கு தோட்டா காயங்கள். 500 காலி ரவைகள் கண்டுடெடுக்கப்பட்டுள்ளன. ஆனால் சுட்டது போலீஸ் என்று இதுவரை ஆவணப்படுத்தப்படவில்லை. அவர்கள் வெறுமனே வேடிக்கைப் பார்த்தார்கள்.
முஸ்லிம், கிறிஸ்தவ, பெளத்த அசுத்தத்தையும் சூத்திர, தலித் அசுத்தத்தையும் நீக்கி, தூய இந்து மதத்தைப் படைக்க நினைக்கும் சாவர்க்கர் பாணி இந்துத்துவவாதிகளுக்கு மேற்குலகின் அறிவியல் பார்வை என்றாலே உவர்க்களிக்கும். ஆனால் அந்த அறிவியலின் கண்டுபிடிப்பான துப்பாக்கியோ இப்போது சூலம், கத்திக்குப் பதில் இடம் பெற்றிருக்கிறது. துப்பாக்கி ஏந்திய சங்கி பாதுகாப்புப் படையினரை நோக்கி அதை நீட்டி மிரட்டும் காட்சி இப்போது உலக அளவில் ஃபேமஸாகிவிட்டது. துப்பாக்கி முனையில் நின்ற ஹெட் கான்ஸ்டபிள் தீபக் தாஹியாவின் வாக்குமூலம் வைரலாகி வருகிறது. துப்பாக்கியை நீட்டிய நபரின் வாக்குமூலத்தைப் பெறும் ஆர்வம் அரசுக்கோ, காவல் துறைக்கோ, மீடியாவுக்கோ இருப்பதாகத் தெரியவில்லை.
ஒரு இந்து-முஸ்லிம் தகராறில் துப்பாக்கி பயன்படுத்தப்படுவது இதுவே முதல் முறை. அவை நாட்டுத் துப்பாக்கிகள், அரசு ஆயுதத் தொழிற்சாலைகள் தயாரிக்கப்பட்டவை அல்ல என்பதை ஒரு ஆறுதல் செய்தியாக எடுத்துக்கொள்வதா என தெரியவில்லை. ஏனென்றால் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்திற்குள் நடத்தப்பட்ட முகமூடி தாக்குதல்களில், அரசு துணை ராணுவப் படைகள் பயன்படுத்தும் நீள தடிகள் பயன்படுத்தப்பட்டதை நாம் கண்ணால் கண்டோம். தற்போது பி.ஜே.பி எம்.பியாக இருக்கும் பிராக்யாவும் இந்திய ராணுவத்தின் கர்னல் புரோகித்தும் குற்றம்சாட்டப்பட்ட மலேகான் வெடிகுண்டு தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட ஆர்.டி.எக்ஸ் காஷ்மீரில் ராணுவம் பறிமுதல் செய்யப்பட்டவற்றிலிருந்து வந்ததா அல்லது இஸ்லாமிய தீவிரவாதிகளிடமிருந்து கடன் பெறப்பட்டதா என்ற விவாதம் இன்றுவரை உண்டு.
சட்டவிரோத ஆயுதங்களின் கேந்திரமாக வடக்கு இந்தியாவின் மாநிலங்கள் பல இருப்பதாகவும் அங்கிருந்துதான் தில்லியில் பயன்படுத்தப்பட்ட நாட்டுத் துப்பாக்கிகள் வாங்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவை சில ஆயிரம் ரூபாய்கள் அவை கிடைப்பது அதிர்ச்சி செய்தி. ஆனால் அவ்வாறு வாங்கப்பட்ட துப்பாக்கிகளை முகமூடி இல்லாமல், வெளிப்படையாகக் காட்டி மிரட்டும், சுடும் காட்சிகள் நமது இன்றைய இந்தியாவின் அவலநிலையைக் காட்டுகிறது. அவ்வாறு துப்பாக்கியைக் காட்டிய நபர் சில அதற்கு தினங்களுக்கு முன்பு பி.ஜே.பி பிரமுகரான கபில் மிஷ்ராவுக்கு அருகில் இருப்பது போன்ற படங்கள் வெளியாகின. சி.ஏ.ஏ எதிர்ப்பு போராட்ட விவகாரத்தில் இரண்டொரு நாட்களில் கடுமையான நடவடிக்கை எடுத்தாக வேண்டும் என்று அவர் தில்லி காவல்துறைக்கு கெடு விதித்தார். ஆனால் குஜராத்தில் 2001இல் நடந்தது போலவே இங்கும் நடந்திருக்கிறது. காவல் துறையினர் வேடிக்கை பார்த்தார்கள். துப்பாக்கிகளுடன் வந்த கும்பல்கள் தாக்குதல் நடத்தின.
வேலை வாய்ப்பின்மையிலும் வறுமையிலும் இருக்கும் வட இந்தியர்களுக்கு இது ஒரு நல்ல ஆஃபர். ஃஹேஷ் டேக் பணம் போல, இத்தனை பேர் மண்டையை உடைத்தால், இத்தனைப் பேரை துப்பாக்கியால் மிரட்டினால்-சுட்டுக் கொன்றால், தீயிட்டு கொளுத்தினால் இவ்வளவு பணம் என ஒரு ரேட் ஃபிக்ஸ் பண்ணியிருக்கலாம். இந்தியாவில் நக்ஸலைட்டுகளாக துப்பாக்கி ஏந்தும் பழங்குடி பகுதிகளைச் சேர்ந்த பலர் மாத சம்பளத்திற்காக அதைச் செய்கிறார்கள் என்பது ஏற்கனவே அறிந்த செய்திதானே. ஆனால் இந்தியாவின் தலைநகரும்கூட பழங்குடிகள் வாழும் காடுகள் போல சட்டம் ஒழுங்கு, அரசு இயந்திரங்களின் எந்தக் கட்டுப்பாடும், நீதி பரிபாலனமும் இல்லாத சுடுகாடாக இருக்கும் என்பது இந்தியாவின் வரலாற்றில் வகுப்புவாத வன்முறையின் வரலாற்றில் புதிய அத்தியாயம்.
நன்றி: https://theprint.in/india/why-northeast-delhi-violence-is-indias-first-hindu-muslim-riots-with-guns/372647/?fbclid=IwAR0hO5ShUktEN8QjBv1jY5SAPxspLchs0orKbLM-BGuWfQ9uM3L1-Q9FZqQ