1931-ஆம் ஆண்டு முதல் 370 சட்டப்பிரிவால் ஜம்மு காஷ்மீருக்கு தனிக்கொடி இருந்துவந்தது. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வழிவகை செய்யும் சட்டம் 370 1949-இல் இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது.
இத்தனை நாட்களாக தனிக்கொடி, தனி சட்டம் என இருந்து வந்த ஜம்மு காஷ்மீரில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் 370 சட்டப்பிரிவு நீக்கப்பட்டு இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. இதனால் நாடாளுமன்றத்தில் எடுக்கப்படும் அனைத்து முடிவுகளும் அனைத்து மாநிலங்களுக்கு பொருந்தும். மேலும் சுதந்திர தினந்தற்கு இனி ஜம்மு காஷ்மீருக்கு தனிக் கொடி இல்லை எனவும் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் 370 சட்டப்பிரிவுக்கு பின்னர் முதல்முறையாக இன்று (15.08.2019) ஜம்மு காஷ்மீரில் சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. ஜம்மு காஷ்மீரில் இதற்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்த நிலையில் ஷேர் இ காஷ்மீர் ஸ்டேடியத்தில் ஜம்மு காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செய்தார். மிகவும் பதற்றமான பூமியான ஜம்மு காஷ்மீரில் முதல்முறையாக தேசியக் கொடி பறப்பது மிக முக்கிய தருணமாக மத்திய அரசு கருதுகிறது