நாட்டிலேயே முதல்முறையாக சத்தீஸ்கர் மாநிலம், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்குப் பதிலாக வாக்கு சீட்டு முறையை நடைமுறைபடுத்துகிறது.
கடந்த செவ்வாய் அன்று சத்தீஸ்கர் மாநிலத்தின் முதலமைச்சர் பூபேஷ் பாகேல் இந்த முடிவை எடுத்துள்ளார். அம் மாநிலத்தில் டிசம்பரில் நடக்கவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் மின்னணு இயந்திரங்களுக்குப் பதிலாக வாக்குச் சீட்டு முறையை பின்பற்ற போவதாக அவர் முடிவெடுத்துள்ளார்
சட்டசபை மற்றும் மக்களவைத் தேர்தல்களில் மின்னணு இயந்திரங்களைப் பயன்படுத்துவது குறித்து காங்கிரஸ் மற்றும் பிற என்.டி.ஏ அல்லாத கட்சிகளின் தொடர்ந்து எழுந்த வலுவான எதிர்ப்பினால் இந்த நடவடிக்கை தற்செயலாக எடுக்கப்பட்டுள்ளது.
முன்னாதாக செய்தியாளர்களிடம் பேசிய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சர் சிவ் தஹாரியா, “அமைச்சரவை துணைக்குழுவுடன் கூடிய அமர்வில் நாங்கள் இது குறித்து விவாதித்தோம், மின்னணு இயந்திரங்களுக்கு பதிலாக வாக்குச் சீட்டு முறையில் உள்ள பிரச்சினைகள் மற்றும் சவால்களை நாங்கள் பரீசிலினை செய்தோம்” என்றார்.
கடந்த பத்தாண்டுகளாக பாஜகத்தான் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சிசெய்து வருகிறது. 2018ஆம் ஆண்டில் நடைபெற்ற சத்தீஸ்கர் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்றதையடுத்து பூபேஷ் பாகேலின் துரித நடவடிக்கைகளால் பல மாற்றங்களை சந்தித்து வருகிறது.
இந்த நடவடிக்கையால் சத்தீஸ்கரில் உள்ள பல பாஜக தலைவர்கள் கடும் எதிர்ப்பினை பதிவுசெய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.