இந்தியா முழுவதும் பாஜக பெரும்பான்மையாக முன்னிலை பெற்று வந்தாலும் தமிழகத்தில் முற்றிலும் நேர்மாறாக தமிழகத்தில் பாஜக, அதிமுக கூட்டணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா முழுவதும் பாஜக கூட்டணி 310க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை பெற்று வருகிறது.ஆனால் தமிழகத்தில் திமுக கூட்டணி 37 இடங்களில் நாடாளுமன்ற தொகுதியில் முன்னிலை பெற்று வருகிறது.
பாஜக வேட்பாளர்கள் தமிழகத்தில் போட்டியிட்ட அனைத்து தொகுதியிலும் பின்னடைவை சந்தித்துள்ளது.அதிமுக கூட்டணி தமிழகத்தில் 2 இடங்களில் மட்டுமே வாக்கு எண்ணிக்கையில் இருந்து முன்னிலை வகித்து வருகிறது, அதுவும் மிக குறைவான வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளது.
பாஜகவின் முன்னணி தலைவர்கள் எச்.ராஜா, தமிழிசை, பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் பின்னிலையில் உள்ளனர்.