தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்கக்கூடாது என்று கடந்த ஞாயிற்றுக்கிழமை ராமேஸ்வரம் முதல் மரக்காணம்வரை எதிர்க்கட்சிகள் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இதில், தி.மு.க, ம.தி.மு.க, வி.சி.க, இடதுசாரி கட்சிகள், தமிழக வாழ்வுரிமை கட்சி ஆகிய அரசியல் கட்சிகளும், பொதுமக்களும், விவசாயிகளும் பங்கேற்றனர். தமிழகத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துவருகின்றன.
தமிழகத்தில் 23 இடங்களிலும், குஜராத்தில் 232 இடங்களிலும் மொத்தம் நாடு முழுவதும் 705 இடங்களில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்கப்படும் அதுவும் 31,996 கோடி ரூபாய் செலவில் ஹைட்ரோ கார்பன் எடுக்கப்படவுள்ளதாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.
இந்தநிலையில், மக்களவை கூட்டத் தொடரில் பேசிய தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, ‘தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் எத்தனை இடங்களில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்கப்படவுள்ளது என்று எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், ‘தமிழகத்தில் 23 இடங்களிலும், குஜராத்தில் 232 இடங்களிலும் என்று நாடு முழுவதும் 705 இடங்களில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்கப்படும் 31,996 கோடி ரூபாய் செலவில் ஹைட்ரோ கார்பன் எடுக்கப்படவுள்ளது’ என்று தெரிவித்தார்.