கவனிக்கப்படாத சில விஷயங்கள் தான் நாளைடைவில் அனைவரும் கவனிக்கும் வகையில் காட்டுத் தீ வேகத்தில் பரவுகிறது.அப்படியாக பிரசவித்த பெண்களுக்கு ஏற்படும்  மன ஊசலாட்டம் பற்றி பார்ப்போம்.

உலக சுகாதாரத்துறை அமைப்பின் அறிக்கையின்படி 30 முதல் 75 சதவீத பெண்கள் இந்தவிதப் பாதிப்புக்கு ஆளாகிறார்கள். அதிலும் ஒரு சில பெண்கள் முதல் பிரசவத்தின் போது தான் இச் சிக்கலில் மாட்டிக் கொள்கிறார்கள் என்கிறது ஆய்வு.

சில பெண்கள் பிரசவத்திற்கு பிறகு அதிகளவு மன அழுத்தத்தில் இருப்பார்கள்.சரியாக சாப்பிட மாட்டார்கள்.தூங்க மாட்டார்கள். அழுதுகொண்டே இருப்பார்கள். எப்போது கவலையில் இருப்பார்கள்.கத்துவார்கள். இருப்பினும் இவை போஸ்ட்பார்டம் சைக்கோஸிஸின் முதற் கட்டம் என்பதால் ஒரு குறிப்பிட்ட காலங்களில் சரியாகிவிடும் .

அதென்ன போஸ்ட்பார்டம் சைக்கோஸிஸ் (postpartum psychosis)அதொரு  மனநோய்.மேலே கூறப்பட்டுள்ள அத்தனை செய்கைகளும் போஸ்ட்பார்டம் சைக்கோஸிஸின் முதல் கட்ட அறிகுறிகளாகும்.

சென்ற வருடம் இந்த அறிகுறிகளைக் கொண்ட ஒரு பெண் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் இது என் பிள்ளையென்று தூக்கி எறியுமளவில் மோசமாக நடந்து கொண்டாள்.பக்கத்து வீட்டுக்காரர்களிடம் குழந்தையை விட்டு‌விடுவாள்.பகலும் இரவும் குழந்தை பக்கத்து வீட்டில் இருப்பது பற்றி எவ்வித கவலையின்றி இருப்பாள். இந்தச் சமயம் தான் வீட்டில் உள்ளவர்களின் அன்பும் அரவணைப்பும் பெண்களுக்கு தேவையாகிறது. ஏனென்றால்  போஸ்ட்பார்டம் சைக்கோஸிஸ் (postpartum psychosis) எனப்படும் மனநோயின் இரண்டாம் கட்ட அறிகுறிகள் இவையென்பதால் மருத்துவர்களிடம் அழைத்துச் செல்ல வேண்டும்.அவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்க வேண்டும்.

அடுத்தக் கட்டமாக ,

தன்னிலை மறத்தல்.கையில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு பிறர் மீது வீசுவது. குழந்தை மீதான பராமரிப்பில் அலட்சியம் தென்படும். ஒரு சிலர் குழந்தையை துன்புறுத்த எண்ணுவார்கள். மற்ற சிலரோ தற்கொலைக்கு முயற்சி செய்வார்கள். இவர்களால் குழந்தைகளின் உயிர்க்கு ஆபத்து ஏற்படும் என்பதை உணர்ந்து குடும்பத்தினர் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும். இவை மூன்றாம் கட்ட அறிகுறி அதாவது பிறழ் நம்பிக்கை (delusion) என்பார்கள்‌.உடனடியாக இவர்களுக்கு மனநல சிகிச்சை அளித்தால் மட்டுமே இயல்பு வாழ்க்கைக்கு மீட்டு வர முடியும்.

முதலில் இதற்கு குடும்பங்களில் விழிப்புணர்வு வேண்டும்.ஏனெனில் போஸ்ட்பார்டம் சைக்கோஸிஸ் (postpartum psychosis) இப்படியெல்லாமா நோய் இருக்கும் என்ற கேள்வியை எழுப்பி அதெல்லாம் ஒன்றுமில்லை அவ எதையோ பார்த்து பயந்து இருப்பாளென்று உங்களது நம்பிக்கையை  முட்டாள்தனமாக செயல்களில் பயன்படுத்தி குழந்தைக்கு தாய் இல்லாதவாறு செய்து விடாதீர்கள்.நிறைய குடும்பங்களில் தற்போது இம்மாதிரியான நிகழ்வுகள் நடந்து வருகிறது.

கணவரின் அன்பும் அரவணைப்பும் பின்னர் புகுந்த வீட்டின் அரவணைப்பு தான் தேவைப்படுகிறது இப் பெண்களுக்கு.அவர்களின் செயல்களை அனுசரித்து போவது என்பது அவர்களுக்கு நீங்கள் செய்யும் பெரிய உதவியாக இருக்கும்.ஏனென்றால் ஏற்கனவே பாதித்த அவர்கள் மீது உங்கள் கோபங்களை காட்டுவதால் என்னப் பயன் இருக்க போகிறது.ஆகவே அவர்களை ஒரு குழந்தை போன்று பார்த்துக் கொள்ளுங்கள்.இந்நிலையிலிருந்து வெளிவர நிறைய அன்பைக் கொடுங்கள். மீட்டெடுங்கள். ஏனென்றால் ஒரு பெண் கர்ப்பமாவது என்பது அவளை மட்டும் சார்ந்தது இல்லை. கணவர் மாமியார் மாமனார் தாய் தந்தை இப்படி அனைவரையும் சார்ந்தது. ஆகையால் அரவணைத்துக் கொள்ளுங்கள்.

விழிப்புணர்வு வேண்டும் என்பதற்காக மார்ச் மாதம் நடைபெற்ற பெண்களுக்கனான நிகழ்வில்  போஸ்ட்பார்டம் சைக்கோஸிஸ் (postpartum psychosis) பற்றி பெண்கள் பிரசவத்திற்கு பின் ஓரிரு நாட்களில் இந்நிலையை அடைவது குறித்து விளம்பரம் ஒன்று மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

ஆகவே

“விழிப்புணர்வை ஏற்படுத்திக் கொண்டே மனித மனங்களில் மாற்றங்களை ஏற்படுத்துவோம்”