நிரந்தர துயரங்களிலிருந்து
ஒரே ஒரு விடுதலை.

அழுக்கான உடல் அகலில்
ஒரே ஒரு உயிர் விளக்கு.

பல்லாண்டு பாவங்களிலிருந்து
ஒரே ஒரு மன்னிப்பு.

இடைவிடாத கனமழையில்
ஓரே ஒரு குடைவிரிப்பு.

மூளை அழுத்தும் பாறைகளுக்கிடையே
ஒரே ஒரு மலர் அவிழ்தல்.

வேட்டை நாய் துரத்தல்களில்
ஒரே ஒரு புகலிடம்.

சதை தின்னும் கழுகுகளிடமிருந்து
ஒரே ஒரு இரும்புக் கவசம்.

சொட்டிக் கொண்டேயிருக்கும்
கண்ணீர்த்துளிகளில்
ஒரே ஒரு ஆவியாதல்.

தள்ளி விட்டுக் கொண்டே இருக்கிற புறக்கணிப்புகளில்
ஒரே ஒரு மார்பணைப்பு.

செத்துக் கொண்டே இருக்கும்
உறக்கங்களில்
ஒரே ஒரு மறுபிறப்பு.