நெருப்பி னன்ன செந்தலை யன்றில்
இறவி னன்ன கொடுவாய்ப் பேடையொடு
தடவின் ஓங்குசினைக் கட்சியிற் பிரிந்தோர்
கையற நரலு நள்ளென் யாமத்துப்
பெருந்தண் வாடையும் வாரார் 5
இதோ தோழிநங் காதலர் வரவே.

 

ஒரு பெரிய பாலைவனம்.

அந்தப் பாலைவனத்தில் உயரமான ஒருமரம் இருக்கிறது.

அந்த மரத்துக்குப் பெயர் தடாமரம்.

அந்தத் தடாமரத்தில் அன்றில் பறவைகள் ஒரு கூடு கட்டியிருக்கிறது.

அந்த அன்றில் பறவைகளில், பெண் பறவையின் அலகு இறால்மீன் வளைந்திருக்குமே அதேமாதிரி வளைந்திருக்கிறது.

ஆண் அன்றில் பறவையின் தலை, நெருப்பு நிறத்தில் செக்கச்செவேர் என்றிருக்கிறது.

இது நடுச்சாமம்.

வாடைக்காற்று வீசிக்கொண்டிருக்கிறது.

அந்த அன்றில் பறவைகள் கொஞ்சிக்குருவி, சிரித்துப் பேசி மகிழ்ச்சியோடு காதல் விளையாட்டு விளையாடிக் கொண்டிருக்கிறது.

மதுரை மருதன் இளநாகனார்
குறுந்தொகை 160