சூர்யா நடிப்பில் அடுத்ததாக வெளியீட்டுக்கு காத்திருக்கும் ‘என்.ஜி.கே’ திரைப்படத்தின் சிங்கள் டிராக் பாடல் வருகின்ற ஏப்ரல் 12-ஆம் தேதி வெளியாகிறது.

யுவன் ஷங்கர் ராஜா – செல்வராகவன் காம்போவில் உருவாகியிருக்கும் படம் என்பதால் ‘என்.ஜி.கே’ படத்தின் இசைக்கு பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. இதற்கு முன் இக்கூட்டணியில் உருவான பாடல்கள் அனைத்துமே மனதை மயக்கும் இசை என்பதே எதிர்பார்ப்புக்கான காரணம்.

ஏற்கனவே, ‘என்.ஜி.கே’ படத்தின் டீஸர் வெளியாகிவிட்ட நிலையில் இப்போது பாடல் வெளியீட்டுக்கான நேரம் கனிந்திருக்கிறது.

சாய்பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்டவர்களும் நடித்துள்ள ‘என்.ஜி.கே’ மே மாத இறுதியில் திரையரங்குகளில் வெளியாகும்.