ராகவா லாரன்ஸின் ‘காஞ்சனா-3’ திரைப்படத்துக்கு தணிக்கை வாரியம் யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.

‘காஞ்சனா’ சீரியஸின் மூன்றாவது பாகமாக உருவாகியிருக்கும் ‘காஞ்சனா-3’ திரைப்படத்தில் ஓவியா, கோவை சரளா, சத்யராஜ், சூரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. வெற்றி ஒளிப்பதிவு செய்ய, எஸ்.எஸ். தமன் இசையமைத்துள்ளார்.

திரில்லர் – காமெடி என இரண்டு பொழுதுபோக்கு அம்சங்களையும் முழுமையாக கொண்டிருக்கும் ‘காஞ்சனா’ படங்கள் ஒவ்வொரு கோடை விடுமுறையிலும் சக்கைபோடு போடுகின்றன.

இந்த ஆண்டு ஏப்ரல் 19-ஆம் தேதி வெளியாகும் ‘காஞ்சனா-3’ திரைப்படமும் வழக்கமான பாணியில் ரசிகர்களை கவருமென எதிர்பார்க்கப்படுகிறது.