சிவகார்த்திகேயனின் புதிய பட லிஸ்டில் அடுத்தடுத்து மூன்று திரைப்படங்கள் காத்திருக்கின்றன. ராஜேஷ்.எம் இயக்கும் Mr.லோக்கல் படத்துக்குப் பிறகு பி.எஸ்.மித்ரன் இயக்கும் ‘ஹீரோ’ மற்றும் ‘இன்று நேற்று நாளை’ ரவிக்குமார் இயக்கும் படங்களில் நடிக்கிறார் சிவகார்த்திகேயன்.

இவைகளுக்குப் பிறகு சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தின் உற்சாகமூட்டும் செய்தி இன்று கோலிவுட்டில் பரபரப்பாக வெளியாகியுள்ளது.

ஹீரோவான பிறகு சிவகார்த்திகேயனுக்கு பெயர் வாங்கி தந்த இரண்டு படங்கள் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ மற்றும் ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’. இதில் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ இயக்குநர் பொன்ராஜுடன் ஏற்கனவே மேலும் இரண்டு படங்களை முடித்துவிட்டார் சிவகார்த்திகேயன்.

பாண்டிராஜ் உடன் மீண்டும் சிவகார்த்திகேயன் இணைவாரா என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் மீண்டும் பாண்டிராஜ் – சிவகார்த்திகேயன் இணைவது உறுதி செய்யப்பட்டது. தற்போது இந்தப் படத்தின் மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் இயக்குநர் இமையம் பாரதிராஜா நடிக்கவுள்ளதாக புதிய தகவல் ஒன்று கூறுகிறது. இதுதொடர்பில் அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம்.