ரு பெரிய மலைக்காடு.

அந்தப் பெரிய மலைக் காட்டில் பெரியபெரிய குண்டுக்கற்கள் ஏராளமாக இருக்கிறது. அந்தக் குண்டுக்கற்கள் அங்கே பெரிய பெரிய யானைகள் படுத்துக் கிடப்பதைப் போல் இருக்கிறது.

யானை மாதிரியே இருக்கிற அந்தக் குண்டுக் கற்களுக்கு மத்தியில் நெசமான ஒரு யானையும் அங்கே படுத்து உறங்கிக் கொண்டிருக்கிறது.

உறங்கிக் கொண்டிருக்கிற அந்த நெசமான யானைக்குப் பக்கத்தில் ‘மானை’ என்று சொல்லப்படுகிற ஒரு பச்சைக் கொடி கொழுகொழு என்று செழிப்பாக வளர்ந்திருக்கிறது.

அப்பொழுதுதான் பிறந்த அந்தப் பச்சைக்கொடி, படுத்து உறங்கிக் கொண்டிருக்கிற அந்த நெசமான யானை மேல் கொடி வீசிக் படர்ந்து கொண்டிருக்கிறது.

நெசமான அந்த யானை உறக்கம் கலைந்ததும் அது எழுந்து போய்விட்டது.

நெசமான யானைமேல் கொடிவீசிப் படர்ந்து கொண்டிருந்த அந்தப் பச்சைக்கொடி பற்றிக்கொள்வதற்குத் துணை இல்லாமல் அது வெறுந்தரையில் கிடக்கிறது.

-பரணர்