பாலும் உண்ணாள் பந்துடன் மேவாள்
விளையாடு ஆயமொடு அயர்வோ ளினியே
எளிதென உணர்ந்தனள் கொல்லோ முளிசினை
ஓமை குத்திய உயர்கோட் டொருத்தல்
வேனிற் குன்றத்து வெவ்வரைக் கவாஅன் 5
மழைமுழங்கு கடுங்குரல் ஓர்க்கும்
கழைதிரங் காரிடை அவனொடு செலவே.

ஒரு மலை அடிவாரம்.

வெயில் கொளுத்தோ கொளுத்துன்னு கொளுத்திக் கொண்டிருக்கிறது. அந்த மலை அடிவாரத்தில் உள்ள மூங்கள் மரங்கள் எல்லாம் காய்ந்து பட்டுப்போய் நிற்கின்றன.

அந்த மலை அடிவாரத்தில் ஒரு ‘ஓமை’ மரம் இருக்கிறது.

ஒரு பெரிய ஆண்யானை தண்ணித்தாகத்தோடு அந்த ஓமை மரத்துக்கு ஓடி ஓடி வருகிறது.அது அந்த ஓமை மரத்தின் பட்டைகளை தன்னுடைய கூர்மையான தந்தங்களால் குத்திக்குத்திக் கிழிக்கிறது.

அந்தப் பெரிய ஆண் யானை அந்த ஓமை மரத்தில் குத்திக்குத்திக் கிழித்த அந்த ஓமை மரத்தின் பட்டைகளில் தண்ணீரே இல்லை. அந்த ஓமை மரத்தின் பட்டைகள் காய்ந்த ஈரப்பதம் இல்லாமல் வறண்டு போய் இருக்கிறது.

அந்தப் பெரிய ஆண் யானை தன் தாகத்துக்குத் தண்ணீர் கிடைக்காமல் வருத்தத்தோடு அங்கே நின்று கொண்டிருக்கிறது.

மழை மேகங்கள் அந்தப் பெரிய மலைக் காட்டுக்கு வெகுதொலைவில் ஆரவாரத்தோடு முழங்கிக் கொண்டிருக்கிறது.

அந்தப் பெரிய ஆண் யானை, மழை மேகங்கள் ஆரவாரமாக முழங்கிக் கொண்டிருக்கிற பெரிய சத்தத்தை அது காது கொடுத்து கவனமாக கேட்டுக் கொண்டிருக்கிறது.

கயமனார்
குறுந்தொகை 396