படப்பிடிப்பு காட்சிகள் சம்மந்தமான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரல் ஆனதால் தர்பார்’ படக்குழு அதிருப்தியில் உள்ளது.
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி, நயன்தாரா, நிவேதா தாமஸ், யோகி பாபு உள்ளிட்ட பலர் ‘தர்பார்’ படத்தில் நடித்து வருகிறார்கள்.
மும்பையில் தொடங்கி நடைபெற்றுவரும் இதன் படப்பிடிப்பு தளத்திலிருந்து தொடர்ந்து புகைப்படங்கள் வெளியாகி வருகின்றன.
ரஜினி, யோகி பாபு, நிவேதா தாமஸ் உள்ளிட்டவர்கள் கிரிக்கெட் விளையாடுவது போன்ற படங்கள் வெளியாகி வைரல் ஆனதால் படக்குழு அதிர்ச்சியடைந்தது. எனவே, படப்பிடிப்பு தளத்தில் ஊடகத்தினர் உட்பட அனைவருக்கும் புகைப்படம் எடுக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.