சர்வதேச அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் அவெஞ்சர்ஸ் சீரியஸின் இறுதி அத்தியாயமான அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் திரைப்படத்தின் தமிழ் ட்ரைலர் நேற்று (ஏப்ரல்) வெளியானது.

இந்த திரைப்படத்தில் தமிழ் ரசிகர்கள் கொண்டாடும் வகையில், பிரதான

பாத்திரத்துக்கு விஜய் சேதுபதி டப்பிங் பேசியுள்ளார். வெளியாகியிருக்கும் தமிழ் ட்ரைலர் தொடக்கத்திலிருந்தே விஜய் சேதுபதியின் அற்புதமான குரல் ஒலிக்கிறது.

மேலும், உலகம் முழுவதும் 26-ம் தேதி வெளியாகும் எண்ட்கேம் படத்துக்காக தமிழ் மற்றும் இதர சில இந்திய மொழிகளில் பாடல்களை உருவாக்கியுள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான்.

விஜய் சேதுபதியின் குரல், ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இன்ஸ்பிரேஷன் என தமிழ் ரசிகர்களைக் கவரும் பல அம்சங்கள் இதில் உள்ளதால் இந்தக் கோடை விடுமுறைக்கு அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் திரையரங்குகளில் கலைக்கட்டுமென தெரிகிறது.