1983-ஆம் ஆண்டில் முதன் முறையாக இந்தியா உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் வென்றதை அடிப்படையாக வைத்து உருவாகும் படம் ’83’.

‘ஏக் தா டைகர்’, ‘பஜ்ரங்கி பைஜான்’ போன்ற படங்களை இயக்கிய கபீர் கான் இயக்கும் இந்தப் படத்தின் மூலம் முதன்முதலில் பாலிவுட்டுக்கு செல்கிறார் ஜீவா.

கபில் தேவாக ரன்வீர் சிங் நடிக்கும் இந்தப் படத்தில் கிரிஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் வேடத்தில் ஜீவா நடிக்கிறார். இதற்காக கிரிக்கெட் பயிற்சியிலும் அவர் ஈடுபட்டு வருகிறார்.

அதுமட்டுமின்றி, படத்தில் முழு கவனம் செலுத்தும் வகையில் 1983-ஆம் ஆண்டு உலக கோப்பையில் பங்கேற்ற கிரிக்கெட் வீரர்களை சந்தித்து ஆலோசனை பெற்றிருக்கிறார் ஜீவா. கபில் தேவ், பல்விந்தர் சிங் சந்து உள்ளிட்டவர்களை ஜீவா சந்தித்த புகைப்படம் வெளியாகியுள்ளது.