கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் தனுஷ் நாயகனாக நடித்துள்ள ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ திரைப்படம் கைவிடப்பட்டதாக ட்விட்டரில் நேற்று பரபரப்பு ஏற்பட்டதால் அதுகுறித்து தயாரிப்பு நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

எஸ்கேப் ஆர்டிஸ்ட் மற்றும் ஒன்றாகா எண்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தின் டீஸர் மற்றும் இரண்டு பாடல்கள் நேற்று திடீரென ஒன்றாக எண்டர்டெயின்மென்ட் யூடியுபிலிருந்து நீக்கப்பட்டன. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த ரசிகர்கள் படம் கைவிடப்பட்டதா என தயாரிப்பு நிறுவனத்திடம் கேள்வியெழுப்பினர்.

இதுகுறித்து விளக்கமளித்துள்ள தயாரிப்பு நிறுவனம், இசை உரிமத்தை தனியார் நிறுவனம் ஒன்றுக்கு அளிக்க பேச்சுவார்த்தை நடப்பதால் பாடல்கள் நீக்கப்பட்டிருப்பதாக கூறியிருக்கிறது.

மேலும், நீண்டகால தாமதம் ஏற்பட்டிருக்கும் இப்படத்தை விரைவில் வெளியிடுவதற்கான பேச்சுவார்த்தையும் நடைபெற்றுக்கொண்டிருப்பதாக செய்திகள் கூறுகின்றன.