மெரினா, கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்துக்குப் பிறகு மீண்டும் பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார்.
இதன் முதற்கட்ட பணிகள் துவங்கியுள்ளதால் படத்தில் பணிபுரியும் தொழிற்நுட்ப கலைஞர்களை படக்குழு அறிவித்து வருகிறது.
படத்தின் இசையமைப்பாளராக டி. இமான் பொறுப்பேற்றுள்ளார். இதுகுறித்த அறிவிப்பு இன்று வெளியானது. கதாநாயகி விரைவில் அறிவிக்கப்படுவாரென எதிர்பார்க்கப்படுகிறது.