சிம்பு – கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது.

தற்போது வெங்கட் பிரபு இயக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள சிம்பு, அதற்கான பணிகளைத் தொடங்கியுள்ளார்.

இந்நிலையில், அறிமுக இயக்குநர் நார்தன் இயக்கும் படத்தில் சிம்பு, கவுதம் கார்த்திக்கோடு இணைந்து நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆக்‌ஷன் படமாக உருவாகும் இதற்கு நவீன்குமார் ஒளிப்பதிவு செய்கிறார். பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இதன் படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடங்குகிறது.