திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் மதுரை மக்களவைத் தொகுதியின் வேட்பாளராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சு. வெங்கடேசன் போட்டியிடுகிறார்.

எழுத்தாளர் சு. வெங்கடேசனுக்கு பல்வேறு எழுத்தாளர்கள், கலைஞர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர். கடந்த வாரம் நடைபெற்ற கலைஞர்கள் சங்கமத்தில் அவருக்கு ஆதரவாக பலர் பிரச்சாரம் செய்தனர்.

இந்நிலையில், முன்னணி நடிகரும் இயக்குனருமான சமுத்திரக்கனி சு. வெங்கடேசனுக்கு ஆதரவாக மதுரையில் இன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

மதுரையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட சு. வெங்கடேசனுக்கு வாக்களிக்குமாறு இதன்போது மக்களிடம் சமுத்திரக்கனி கேட்டுக்கொண்டார்.