1928இல் பிறந்த ஏக்னெஸ் வர்டா பிரெஞ்ச் புதிய அலை இயக்குநர் வரிசையில் 1950களில் இணைந்தார். தனது பெண்ணிய சிந்தனைகள் மூலம் மாறுபட்ட படைப்புகளை வழங்கிய ஏக்னெஸ் வர்டா நேற்று (மார்ச் 29) உயிர் இழந்தார்.

அகடாமி விருந்து, பாம்டோர் விருது, கோல்டன் கோல்ப் விருது என பல விருதுகளை தன்வசம் பெற்று உலக முழுதும் பெண் இயக்குநர்கள் இயக்கும் படங்களுக்கு தனது ஆதரவை அளித்துவந்தார்.

வாகாபண்ட், ஃபேசஸ் பேலசஸ், லீ பான்ஹர் போன்ற படங்கள் மூலம் உலக கவனத்தை ஈர்த்து பல விருது அமைப்பு குழுவில் நடுவராக பணியாற்றிருக்கிறார்.

ஆவணப்படம், குறும்படம், தொலைக்காட்சி தொடர்கள் உள்ளிட்ட பல துறைகளில் தன்னுடைய திரை ஆளுமையை நிரூபித்துக்கொண்டிருந்த ஏக்னெஸ் உயிர் இழந்திருப்பது, பிரெஞ்சு திரை ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.