ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ‘தர்பார்’ படப்பிடிப்பு மும்பையில் இன்று தொடங்கியது. பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பில் படக்குழுவினர் பலரும் பங்கேற்றனர்.

ரஜினிகாந்த் நடிக்கும் 167-வது படத்துக்கு ‘தர்பார்’ என தலைப்பிடப்பட்டுள்ளதாக நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதனுடன் வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வைரலாகியிருக்கிறது.

தொடர்ந்து படத்தின் படப்பிடிப்பு பணிகளை இன்று தொடங்கியுள்ளனர். இதில் ரஜினிகாந்த், ஏ.ஆர்.முருகதாஸ், சந்தோஷ் சிவன் உள்ளிட்டவர்கள் கலந்துக்கொண்டனர்.