சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘மிஸ்ட்டர் லோக்கல்’ வெளியாகும் அதே மே 17-ஆம் தேதி விஜய் சேதுபதியின் சிந்துபாத் படமும் வெளியாகுமென அறிவிக்கப்பட்டது.
ஆனால், திடீரென இந்த போட்டியிலிருந்து விஜய் சேதுபதியின் சிந்துபாத் விலகியிருக்கிறது. பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி ஆகிய படங்களை இயக்கிய அருண்குமார் சிந்துபாத் படத்தை இயக்கியுள்ளார்.
அஞ்சலி, விஜய் சேதுபதியின் மகன் சூர்யா உள்ளிட்டவர்கள் முக்கிய பாத்திரத்தில் நடிக்கும் இப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
மிஸ்டர் லோக்கல் – சிந்துபாத் ஒரேநாளில் வெளியாவதால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் இருந்தனர். போதிய திரையரங்குகள் கிடைக்காததால் திடீரென சிந்துபாத் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டிருக்கிறது . அடுத்து எப்போதும் படம் வெளியாகுமென விரைவில் அறிவிக்கப்படுமென தெரிகிறது.