இணைய உலகில் ஆர்ப்பரிக்கும் மோடி எதிர்ப்பு அலையில் தெரியாமல் சிக்கிக்கொண்ட நடிகை காஜல் அகர்வால் நேற்று நெட்டிசன்களால் வறுத்தெடுக்கப்பட்டார்.
விவேக் ஓபராய் பிரதமர் நரேந்திர மோடியாக நடிக்கும் பி.எம் நரேந்திர மோடி படத்துக்கு வாழ்த்து கூறி ட்வீட் செய்ததே மோடி எதிர்ப்பு நெட்டிசன்களிடம் காஜல் சிக்கியதற்கு காரணம்.
ட்விட்டரில் விவேக் ஓபராய் மற்றும் படக்குழுவினருக்கு வாழ்த்து கூறி காஜல் அகர்வால் பதிவேற்றிய டீவீட்டில் ஜெய்ஹிந், தேசியக்கொடி உள்ளிட்டவை இடம்பெற்றிருந்தன.
இதனை பார்த்த நெட்டிசன்கள், பிரதமர் நரேந்திர மோடிதான் இந்திய தேசம் என்பதுபோல் ஜெய்ஹிந்த், தேசியக் கோடி என பம்மாத்து காட்டியிருக்கும் காஜல் என்ன மோடி ஆதரவாளரா? நீங்கள் என்ன சங்கியா? என்று விமர்சிக்க ஆரம்பித்துவிட்டனர். அதேசமயம், சில பாஜக ஆதரவாளர்கள் காஜல் அகர்வாலுக்கு ஆதரவு அளித்ததும் நடந்தது.