There is only one happiness in this life, to love and be loved.”– George Sand, French Novelist

 

இந்தியாவில் காதல்என்பதே சாகஸம்தான். ஏனெனில் இங்கே காதல் என்பது ஆண்- பெண் ஈர்ப்பு சார்ந்தது மட்டுமல்ல; பரஸ்பரம் பகிர்ந்து கொள்ளச் சுவாரஸ்யங்கள் இருக்கின்றனவா எனக்கவலையுறுதல் மட்டுமல்ல; குணங்கள் இணங்கிப் போகுமா என்றுயோசிப்பது மட்டுமல்ல. நம்நாட்டில்காதல் என்பது தகுதிகள் பார்த்துத்தான் வரவேண்டும் என்பது விதி. ஆணென்றால் பெண்ணைக் காப்பாற்றும் பொருளாதார பலம்பெற்றவனாக இருக்கவேண்டும்; பெண்ணானவள் தன்சாதி அல்லது மதத்தின் கௌரவத்தைக் காப்பவளாகஇருக்கவேண்டும்;  இருவருமேவயதில், தோற்றத்தில், அந்தஸ்தில் சமமானவர்களாக இருக்கவேண்டும். ஆணுக்கும் பெண்ணுக்கும் மட்டும்பிடித்தால்போதாது, இருவரின் குடும்பத்தாருக்கும் பரஸ்பரம்பிடிக்கவேண்டும்.

 

கத்தையாய் இத்தனை விதிகள் நிறைந்திருக்கின்ற காரணத்தால்தான் இம்மண்ணில் 99% காதல்கள் கல்யாணத்திற்கு நகர்வதில்லை. மணிக்கணக்காகப் பேசுதல், ஒன்றாக ஊர்சுற்றல், பரிசுகள்பரிமாறிக்கொள்தல், சிறுசண்டைகளிட்டுச் சமாதானமாதல், அதிகபட்சம் ஓரிருமுறை ஆணுறையிட்ட புணர்ச்சி என்பதோடு நின்றுவிடுகின்றன.

 

அதனாலேயே காதலில் நாம் ஆழமாய் இறங்குவதில்லை. வெல்லும்முனைப்பற்ற விளையாட்டில் எவர் கவனங்காட்டுவார்! சொல்லப்போனால் நமக்குக் காதலிக்கவே தெரியாது. ஸ்டைலாய்பைக் ஓட்டினால்காதலிப்போம்; மேக்கப்போட்டு அழகாய் வந்தால் காதலிப்போம். காதலிக்காவிட்டால் பின்தொடர்ந்து தொந்தரவு செய்வோம்; ஆழமான காதலென்றால் கத்திக்குத்தும் உண்டு. பதின்மத்தில் பாலீர்ப்பு (Infactuation) என்றால்சரி. விட்டுப் பிடிக்கலாம்.ஆயுளுக்கும்அப்படியேதான் என்றால்எப்படி!

 

 

ஒருபுறம் நிஜஉலகின் காதல்இப்படித் தடுமாறுகிறதென்றால், மெய்நிகருலகிலோ காதலானது அதன் அத்தனை சாத்தியப்பாடுகளையும் பாவித்துத் தடதடக்கிறது.

 

சமூக வலைதளக் கலாசாரத்தின் பின்புலத்தில் காதல் அதன் கோடுகளை அழித்துக்கொண்டே வருகிறது. ஒருவனுக்கு ஒருத்தி என்ற பழைய பஞ்சாங்கப்பண்பாட்டை விடுங்கள், ஒருநேரத்தில் ஒருகாதல் என்றசங்கதிகூட வழக்கொழிந்து வருகிறது. லவ்யூக்களும் மிஸ்யூக்களும், உம்மாக்களும், வெட்சாட்களும் தன்வாழ்க்கைத்துணை அல்லாதமற்றவர்களோடு- அதுவும் ஒருவருக்குமேற்பட்டவர்களுடன்- பகிர்வது சகஜமாகிவிட்டது. அதில் எந்தக் குற்றவுணர்ச்சிக்கும் இடமிருப்பதில்லை. காதல்என்பது நட்பின்பரிமாண‌த்தைஎடுத்துவிடுகிறது. அதாவது ஒருவருடனான பிரத்யேகத்தன்மை என்பதுஅடிபட்டு அக்கணத்தின் சந்தோஷமேபிரதானமாகிறது.

 

வாழ்க்கையை அனுபவிக்ககாதல் ஒரு கருவியாகிவிட்டது. அதாவதுகாதல் ஒருநுகர்வுப்பண்டம்என்றாகிவிட்டது. முன்பு கற்புக்கும் காதலுக்கும் இருந்தவலுவானமுடிச்சுஅவிழ்ந்துவிட்டது. இன்றுகாதல்இன்னதென்றில்லை-ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவடிவில் அமீபாவாய். அவ்வகையில்காதல்கடவுளாகிவிட்டதுதான்!

 

மதமற்றும் சமூகநியதிகளின்படி இவற்றைப்பிறழ்வுகள் என்றுகொண்டால் இவையாவும் நிஜஉலகிற்குள்நுழையும்போது கள்ளக்காதலாக அடையாளம் பெறுகிறது. கள்ளக்காதல்என்பதற்குப்பின்னால் ஓர் எளிய, அபத்த நம்பிக்கைதான்இருக்கிறது: தற்சமயம் இருக்கும் இணையைவிட ஏதோ ஒருவகையில்அந்தப்புதியஇணை மேலானவராகத் தோற்றமளிக்கிறார். (பொதுவாய் அது உடலின்பமாகவோ ஆறுதல் சொல்லாகவோ இருக்கிறது. சிலசமயம் இணையைக்காது கொடுத்துக் கேட்பதும், கொஞ்சம் நேரம் உடன் செலவிடுவதும்கூட ஒருவரைதன்கணவன் / மனைவியைவிட உயர்த்திவிடுகிறது.) அதைநம்பி இறங்குகிறார்கள். குடும்பம்உடைகிறது. சிலர்பெற்றகுழந்தையைக்கூட கொல்லத்துணிகிறார்கள். ஆனால் அச்சமயம் இன்னோர் எளிய உண்மையான

தள்ளிஇருக்கையில் (அல்லதுகுறைந்தநேரம் இருக்கையில்) எல்லாம்நன்றாக இருப்பதாகவேதோன்றும் என்பதை மறந்து விடுகிறார்கள் .அதேகதையைமீண்டும்முதலிருந்துஆரம்பிக்கிறார்கள். அதேபிணக்கு. அதேபிரிவு.

 

 

கள்ளக்காதலியே காதலியோ மனைவியோ ஆகும்போது பெரும்பாலானகதைகளில் அதேத‌ன் பழையஉலகம்தான்மீ ளும் என்பதை உணரும் திராணி இருப்பதில்லை. பிரச்சனை மனிதர்கள்அல்ல; அவர்கள் ஏற்கும்பாத்திரம்தான் என்பதுபுரியாததுதான் இன்றைய இந்தியஆண்- பெண்உ றவிலிருக்கும் பிரதானச்சிக்கல் என்பேன்.

 

ஆனால் எப்படியும் எல்லோரும் காதலித்தாகத்தான் வேண்டும் .ப்ரக்ஞைப் பூர்வமாகக் காதலிப்போம் என்பது மட்டுமேநான் சொல்லவருவது. காமப்பகிர்விற்குத்தான் காதல் என்றாலும் அதில் இருவருமே தெளிவாய் இருக்கவேண்டும்.   ஒருவர் வேறு எதிர்பார்ப்புடனும் மற்றவர்விளையாட்டாகவும் இருப்பதுஅயோக்கியத்தனம்தான்.

 

இன்றைய நவீனஉலகிலும்“ காதலில் ஏமாற்றப்பட்டார்” என்றுவரும் செய்திகள் ஆச்சரியமேஅளிக்கின்றன.எந்த‌க் காதலெனினும் அடிப்படைநேர்மைவேண்டும்.

 

கலப்புமணங்களே சாதியொழிப்ப்பைச் சாத்தியப்படுத்தும் என அம்பேத்கர் நம்பினார். (“The real remedy for breaking Caste is inter-marriage. Nothing else will serve as the solvent of Caste.” – The Annihilation of Caste). கலப்புமணங்கள் நிகழ பிரதான‌நடை முறைவாய்ப்புகாதல்தான். சாதிமீறியகாதல்களை நாடகக்காதல் எனப்பொதுமைப்படுத்துவதும், கலப்புமணங்களுக்கு எதிராய்மாநாடு நடத்துவதும், எல்லாவற்றிலும் உச்சமாய் ஆணவக்கொலைகளில் இறங்குவதும் ஆதிக்கசாதி அமைப்புகள் காதலைக் கண்டு எவ்வளவுதூரம் பதற்றம்கொண்டிருக்கின்றன என்பதைக்காட்டுகின்றன. காதலை எதிர்ப்பதுமானுடவிரோதச்செயல்.சாதிவெறியர்கள்அதையேசெய்துகொண்டிருக்கிறார்கள்.

 

இவர்களிலும்முற்போக்குஉண்டு. தங்கள் சாதிக்குள் காதலித்தால்மட்டும் பெரியமனதுடன் திருமணத்திற்குச் சம்மதிப்பார்கள். உண்மையில்சாதிக்குள் திருமணம்முடிப்பதேசாதிவெறிதான். சாதிஒழியவேண்டும்எ ன்று உண்மையிலேயே எண்ணமிருந்தால் காதலித்து மணம்புரிய வேண்டும், அதுவும்சாதிக்குவெளியே பெற்றோரால் நிச்சயிக்கப்பட்ட திருமணங்களைவிட காதல்திருமணங்களே அதிகவிழுக்காடு விவாகரத்துகளில் முடிகின்றன என்றதகவலைகாதலுக்கு எதிராகச்சொல்கிறார்கள். ஆனால் நான்அதைகாதல்திருமணங்களே பெண்களுக்குக்கூடுதல் சுதந்திரத்தைவழங்குகின்றன என்பதாகப்பார்க்கிறேன். எந்தத்திருமணம் ஆயினும்சண்டைசச்சரவு இருக்கவேசெய்யும். ஆனால்அதுமுற்றினாலும்பெற்றோர் பார்த்துவைத்த மணங்களில்பல்லைக்கடித்துக்கொண்டுபெண்தன்வாழ்நாளை அவனுடனேயே ஓட்டத்தீர்மானிக்கிறாள். ஆனால் காதல்திருமணத்தில்அவளுக்கு வெளியேறும்திடம் அதிகம்இருக்கிறது. ஏனெனில் யார்துணைஎன்பது இதில்அவள்தீர்மானம். ஆக, விலகலுக்கும் அவளுக்கு உரிமைஇருக்கிறதுஎன்றாகிறது.

 

 

சுருக்கமாய், ஆணோ, பெண்ணோ மூன்றாம் பாலினரோ உங்கள்வாழ்வை உங்கள்பிரியப்படி முழுச்சுதந்திரத்துடன் மேற்கொள்ள‌காதலித்துத் திருமணம்செய்யுங்கள்!

 

காதல்களிலும் பலவகை உண்டு.  பரஸ்பரம் காதலிப்பவர்கள் (இவர்களில் மணந்துகொண்டவர்கள், பிரிந்தவர்கள்என்ற இருஉட்பிரிவுகள்உண்டு). ஒருதலையாய்க் காதலிப்பவர்கள் (சங்கஇலக்கியத்தில் இதற்குத்தனியே‘கைக்கிளை’ என்றொருதிணை வேறு வைத்திருக்கிறோம்). காதலையே வெளிப்படுத்தாதவர்கள் (அதைப் பற்றி‘இதயம்’என்ற படமாகஎடுத்தால் பிரம்மாண்ட வெற்றிபெறச்செய்வோம்).

 

காதலில் மிகச்சுகமானது காதலிக்கப்படுதலே. அதுஓர்அங்கீகாரம்; ஒருமரியாதை; ஒருபொறுப்பு. எல்லாவற்றுக்கும் மேலாய் நம்மைக்கம்பீரமாய் உணரச்செய்யும்எதிராளியின்சரணடைதல். வாழ்நாளில் ஒருமுறையாவது அதுநிகழவேண்டும்.அல்லாதவர்கள் சபிக்கப்பட்டவர்களே. பொன்முகலிகவிதையில்வருவதுபோல் –

 

நண்பனே

காதலிக்கப்படாமலே

இறந்துபோவதன்

துயரம்பற்றி

உனக்குஒன்றுமேதெரியாது…

 

அனைத்திலும்கொடுமைதான்காதலிக்க‌ப்பட்டதே கடைசிவரைதெரியாமலிருந்துவிடுவது. கனவென்றேநினைத்துக் கடந்துவிட்டநனவு ஒன்றைப்போல் அத்தனைஅபத்தமானது அது.சிலருக்கு

அதுவாழ்நாளையேவீணாக்குவதாய்அமையக்கூடும்.

 

அப்படிஎன்னகுறைந்துவிடப்போகிறது, காதலித்தால் சொல்லித்தொலையுங்கள்!