Platonic கவிதைகள் – 1
அன்பின் துளிகளால் எப்பொழுதும் நிறைந்ததிந்த பெருவெளி ..
அணைக்க அதிசயிக்க சற்று ஆர்ப்பரித்து அடம் செய்து அழ அமைதியாய் அதிகாரமாய் அயர்ச்சியான பொழுதுகளில் அன்பை வேண்டி நிற்கும் சிறு விரல்கள் ..
கோர்த்துக்கொண்டு கொண்டாடும் பேரன்பு Platonic .
நலம் இருவருக்குமான ‘Lingua Franca ‘!
உலக கவிதை தினத்தில் உங்களோடு
பயணிப்போம் வாருங்கள் ..
கவிதைகளோடு …..
El Amor
யுகம் யுகமாய்
நீதான்
நிகழ்ந்துகொண்டிருக்கிறாய்
இந்த முறையும்
நீ தான்
நீ
the Yearn
ஒரு
குழந்தையின்
மொழியறிதலாய்
ஒவ்வொரு
சொல்லாய்
உள்ளேகுகிறாய்
நீ
the Reverberation
வதையின்
அளவுகோலிற்கு
உன்
பெயர்
the second glass of wine
அறம்
தூரம்
உடைக்க
துணிகிறது
காணக்கள்வெறி
algorithm
நிகழ்
விதிர்
சேர்
கிளர்
முகிழ்
களை
அகழ்
சலி
முடி
உறை
வீழ்
பிரி
தூர்
எரி
தவிற்
ஊடுருவு
கலை
பிணை
கன
எஞ்சித்துய்
கோலாகலத் தழுவு
ஊனமுற்
விரகத்திமில் இசை
வேர் துயில்
மௌனக் கேவல் மலர்த்து
புலனிகள் சாபம் தீர்
அந்திகள் நிரப்பு
யாமநீளம் பகர்
வாதை அருள்
மறுபடி
நிகழ் …..!
What not?
தீராமழை
ஊடாவனம்
நிசிப்பரிவு
கவிஞன் வெறுமை
புத்தகப்பித்து
முதலெழுதுதற் கிறுக்கு
தீதைக்களி
எத்தனித்து மறுத்த முத்தம்
தீ இடை
தீண்டா விரல்
புகா நம் வானம்
உன் நான்
என் நீ
நம் நாம்
இன்னும்
எண்ண வெல்ல ஆமோ ?
event horizon
யுகத்தின்
துகளென்பது
இல்லை ..
நிகழ்தலும்
அப்படியே
synonym of unique
நிசம்
ஏதுமற்ற
ஒரே
பிரதி
நீ
light year
கழியா
நாழிகை
நீ
களைத்த
நிமிடமாய்
நான்
யுகமாவாயா
blizzard
தாகித்திருக்கிறேன்
உறைபனி
புயலனுப்பு
அம்முத்தங்கள்
காயுமுன்
எரியலாம்
வா
platonic
அதுலக்கனவு
கடுநிசி
தீச்சிறகு
தீண்டா உடல்
விதிர் காமம்
நீளும்
யாமம்
உயிருக்கு
வெளியே
ஒலிக்கும்
நீ