தமிழில்: கோகுலகிருஷ்ணன் கந்தசாமி
மோடியின் கொரோனா செய்தி பெரும்பாலும் நடுத்தர மற்றும் மேல்தட்டு வர்க்க மக்களுக்கு கருத்து தெரிவிக்கும் விதமாகவே இருக்கிறது. அதனூடாக மில்லியன் கணக்கான ஏழை மக்கள் மீது சிறிய அளவில் பச்சாதாபம் தெரிகிறது. நரேந்திர மோடியின் அரசியல் உள்ளுணர்வு எங்கே இருக்கிறது?
அரசியல் காரணங்களுக்காக தினசரிகளின் தலைப்புச் செய்திகளை மாற்றுகின்ற புத்திசாலித்தனத்திலும் அணுகுமுறையிலும் நரேந்திர மோதியின் அரசாங்கத்திற்கு நிகராக எந்த ஒரு போட்டியாளரும் இல்லை. இதற்கு சமீபத்திய உதாரணம் வந்தே பாரத் மிஷன்(வெளி நாடுகளில் வசிக்கும் இந்தியர்களை தாயகம் கொண்டு வருவது). நாடெங்கும் பரவிக் கிடக்கின்ற சோகத்தில் ஒரு புதிய உற்சாகத்தை தந்திரமாக உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
உலகெங்கிலுமுள்ள பொருளாதார நடவடிக்கைகளை, அதன் முதுகெலும்புகளை கொரோனா வைரஸ் உடைத்து விட்டது. ஏறக்குறைய ஒவ்வொரு நாட்டிலும் அயல்நாடுகளில் பணியாற்றும் குடிமக்கள், மாணவர்கள், சுற்றுலா பயணிகள் மற்றும் குடும்பங்கள் சிக்கியுள்ளனர். இவர்களை மீட்டு தாயகம் கொண்டுவருவதற்கு பெரும்பாலான நாடுகள் நடவடிக்கைகளை முடுக்கியுள்ளன.
இந்தியா மட்டுமே இதை ஒரு நிகழ்வாக கொண்டாடிக் கொண்டிருக்கின்றது. நீங்கள் நினைப்பது போலவே மோதி தன்னுடைய விளையாட்டு புத்தகத்திலிருந்து நிகழ்த்திக் கொண்டிருக்கும் ஒரு விளையாட்டாகவே இருக்கிறது. இந்த மாதிரியான ஒரு விளையாட்டு ஒரு தலைப்புச் செய்தி, ஒரு ஹேஷ்டேக் உடனே இருக்கிறது. பல அமைச்சகங்கள் இதை தனது சுட்டுரையில் ட்விட் செய்து கொண்டாடுகின்றன. பாஜகவின் இணையப் பிரிவும் இந்த கொண்டாட்டத்தில் இணைந்து கொள்கிறது. அதுபோலவே சில தொலைக்காட்சி சேனல்களும் இந்த நிகழ்வில் பங்கெடுத்துக் கொள்கின்றன.
பாஜக ஆதரவு சேனல்கள் ஏற்கனவே ஒரு நேரலையை தொடங்கிவிட்டன. எடுத்துக்காட்டாக, ஒரு விமானம் மிகவும் உற்சாகமான இசைக்கு தன்னை உட்படுத்திக் இருக்கிறது. சுமார் 781 இந்தியர்கள் ஏற்கனவே இறங்கியதற்கான கொண்டாட்டமாக இருக்கிறது. முசாபராபாத் அல்லது ஸ்கார்டுவை வெற்றிகரமாக விடுதலை செய்து திரும்பி வருவது போல வருகிறார்கள். அமைச்சர்கள் இதை ஒரு சாதனை என்று பாராட்டுகிறார்கள். ஏதோ மரணத்தின் வாயில் இருந்து அவர்கள் விடுவிக்கப்பட்டது போல பாராட்டுகிறார்கள். இது அபத்தமாக உங்களுக்கு தெரிந்தால் இந்தியாவுக்கு திரும்பிவரும் இவர்களுக்காக ஹோட்டல்களில் தயாராகிக் கொண்டிருக்கும் தனிமைப்படுத்தப்பட்ட வசதிகள் குறித்து நமக்கு வந்து கொண்டிருக்கும் கதைகளை பாருங்கள்.
இந்த வசதிகளுக்காக அவர்கள் பணம் கொடுப்பார்கள் என்று நமக்கு நினைவுவூட்டுகிறார்கள். அவர்களால் பணம் கொடுக்க முடியும், அதனால் கொடுக்கிறார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக அவர்கள் பெருங் கடவுள்களின் குழந்தைகள். ஆனால் எல்லா இந்தியர்களும் அவ்வாறு இருக்க முடியாது. நம்மிடையே 138 கோடி மக்கள் இருக்கிறார்கள். ஒரு நிமிடம் ஏழைகளின் கடவுள்களுக்காக ஒதுக்குங்கள். நம்மில் பலருக்கு அவர்கள் எவ்வாறு தங்கள் உதவிகளை வழங்க முடியும்? மிகவும் தகுதியானவர்களை மட்டும் தேர்ந்தெடுப்பார்கள்.
இது இந்தியர்கள் அனைவரும் மதிக்க வேண்டிய ஒன்று. அரசாங்கம் தனது விமானங்களில் பல இந்தியர்களைத் திரும்பக் கொண்டுவருகிறது, அவர்களை வசதியான தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் தங்கவைக்கிறது, எனவே தங்கள் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், அயலவர்களுக்கும் தொந்தரவுகளின்றி அவர்கள் பாதுகாப்பாக வீடுகளுக்கு செல்ல முடியும். 1990 ல் ஆக்கிரமிக்கப்பட்ட குவைத்தில் இருந்து லட்சக்கணக்கான மக்களை அக்ஷய் குமார் தனிநபராக இந்தியா கொண்டு வந்ததிற்குப் பிறகு இதுபோன்ற நம்பமுடியாத சாதனை முதன்முறையாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது நவீன, மீட்டெடுத்த இந்தியாவின் உற்சாக கொண்டாட்டம். உலகிற்கு ஆசிரியராக அல்லது முன்னோடியாக இருக்கிறது. நீங்கள் அனைவரும் ஒன்றிணைந்து, உங்கள் குதிகால்களை படமெடுத்து , ‘வந்தே பாரத் மிஷனின்’ கொண்டாட்டத்துக்கு வணக்கம் செலுத்துங்கள். ஒருவேளை இவற்றை விட நூறு மடங்கு அதிகமாக, ஆயிரம் மைல் தொலைவிலிருந்து வீட்டிற்கு திரும்பி, கொப்புள காலில், வெறும் வயிற்றில், வரவேற்புக் குழுக்கள், வரவேற்பு ட்வீட்டுகள், தனிமைப்படுத்தப்பட்ட வீடுகள் இல்லாமல், 45 நாட்கள் ரயில்கள் அல்லது பேருந்துகள் இல்லாமல், பயணங்களுக்கு பணம் கொடுக்க கூட தயாராக இருந்தாலும் வாகனங்களின்றி துன்பப்படும், சக இந்தியர்களின் துயரங்களை நீங்கள் ஒருபோதும் பொருட்படுத்துவதில்லை.
அவர்கள் எங்களுக்கு சமமானவர்களல்ல. புத்திசாலித்தனமாகவும், மெத்தப் படித்தவர்களாகவும், சிறந்த ஜாதகங்களுடனும், வெற்றிகரமான பெற்றோர்களுடனும் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாகவும் இருந்திருந்தால், அவர்கள் ஏன் எங்கள் கட்டுமான தளங்களில் செங்கல் மற்றும் சுண்ணாம்பு சுமக்கிறார்கள்? அவர்கள் வெளிநாட்டில் வேலை செய்வார்கள் அல்லது படிப்பார்கள். கடவுள் எல்லா இந்தியர்களையும் சமமாக்கவில்லை என்றால், கடவுளுடன் போராடுங்கள். இதற்கிடையில், இந்த மாபெரும் பாரத் மிஷன் பணியைக் கொண்டாடுங்கள். இந்த வாரத்திற்குரிய வாதத்தை, ‘வந்தே பாரத் Vs பாரத் கே பந்தே’ (இந்திய மக்கள்) என்று அழைப்பதற்கான காரணம் இதுதான்.
இந்த நிலையில், எந்த கட்டத்திலும் கேள்வி கேட்பது குறித்து கற்பனை செய்யாத நாம், இந்த அரசாங்கத்தின் இரண்டாவது பதவிக்காலத்தின் தொடக்கத்திலேயே அந்தக் கேள்வியை கேட்க வேண்டிய தேவையிருக்கிறது: நரேந்திர மோடி மக்களுடன் தனது தொடர்பை இழக்கிறாரா?
இரண்டு முறையும் முழு பெரும்பான்மையை பெற்றார், எல்லா எதிர்ப்பைகளையும் அழித்தார், புத்திசாலி மட்டுமல்ல என்பதால் மோதி இந்த உயரத்தை எட்டவில்லை. இந்திரா காந்திக்குப் பிறகு நாங்கள் பார்த்த மிகவும் புத்திசாலியான அரசியல்வாதி மோதி. இந்திராவை போன்று எந்தவொரு வாரிசுரிமையுடனும் மோதி வரவில்லை, அநேகமாக சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் முற்றிலும் சுயமாக உருவாக்கப்பட்டவர்.
மோடியின் அரசியல் மூன்று முக்கிய பண்புகளில் கட்டமைக்கப்பட்டுள்ளது, அவை முக்கியத்துவத்தின் அடிப்படையில் பட்டியலிடுகிறேன்: 1. சிறந்த சொற்பொழிவு மற்றும் தகவல் தெரிவிக்கும் திறன்; 2. தனிப்பட்ட சக்தி மற்றும் தீர்க்கமான முடிவெடுக்கும் தன்மை 3, மிக முக்கியமானது, வெகுஜன இந்தியருடன் மிக நெருக்கமாக அடையாளம் காணும் திறன், ஏழ்மையான இந்தியர்கள் – இந்தியாவின் வாக்காளர்கள் – அவர்களுடன் அடையாளம் காணுவது. அந்த மக்கள் அவரை விரும்புகிறார்கள், ஏனென்றால் காந்தியர்கள் இல்லாத அனைத்தையும் அவர்கள் விரும்புகிறார்கள். சுயமாக உருவான, மேல்தட்டு வர்க்கமில்லாத, தொழிலாளர்கள் வர்க்கம் (சாய்வாலா), எந்த முன்னுரிமையும் அல்லது ஆடம்பரமான வெளிநாட்டுக் கல்வியும் இல்லாத, எளிய, நெகிழ்வான வாழ்க்கை முறை உடைய, ஏழைகளின் மீது பச்சாதாபம் போன்றவற்றை பார்க்கிறார்கள். பச்சாதாபம் என்ற வார்த்தையை அடிக்கோடிட்டுக் காட்டுங்கள். ஏனென்றால் நாம் விரைவில் அதற்குத் திரும்புவோம்.
மோடி தனது வேண்டுகோளை உயர்தட்டு மக்களுக்கு எதிரானவராக , ஒவ்வொரு மாவட்டத்திலும் பயணம் செய்து நேரத்தை செலவிட்டு நாட்டை அறிந்து கொண்ட ஒருவராக (அவர் பெருமை கொள்ள வேண்டிய ஒன்று) உருவாக்கி வைத்திருக்கிறார். அவர் அதிகாரத்தை இழந்தால், அது அவரை அதிகம் பாதிக்காது என்றும் அவர் நமக்கு நினைவூட்டுகிறார். அவர் வெறுமனே தனது ஜோல்னா பையினை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு திரும்பிச் செல்வார். ‘ஃபக்கீர்’ இழப்பதற்கு என்ன இருக்கிறது?
இந்த உள்ளுணர்வுதான் “சூட்-பூட்” என்னும் கருத்து அவரை நோக்கி பறந்த தருணத்தில் அவரை உலுக்கியது. இதனால்தான் அவர் அரசியல் பொருளாதாரம் குறித்த தனது அணுகுமுறையில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தினார். வணிக நட்பு குஜராத் மாடல் குப்பையில் கொட்டப்பட்டது. அதன்பிறகு MGNREGA போன்ற திட்டங்களை கேலி செய்யாமல் பலப்படுத்தினார். தேர்தலில் வெற்றி பெற வேண்டிய ஒரு இந்திய அரசியல்வாதி மற்றும் 300 மக்களவை உறுப்பினர்களின் வாழ்க்கையில் உண்மையான வி.ஐ.பி.க்கள் ஏழைகள் அல்லது பெரிய தொழிலாள வர்க்கங்கள் என்பதை மோதி அறிந்திருக்கிறார். நகர்ப்புற உயரடுக்கினர் அல்லது நடுத்தர வர்க்கங்கள் அரசியல்வாதிகளைப் பொறுத்தவரை வி.ஐ.பி.க்கள் அல்ல.
அப்படியானால், கொரோனா வைரஸ் காலத்தில் அவரது செய்திகள் அனைத்தும் நடுத்தர வர்க்கங்கள் மற்றும் உயரடுக்கினருக்கு மட்டுமே எவ்வாறு இயக்கப்பட்டன? அவரது உரைகள் மற்றும் ‘மான் கி பாத்’ உரைகளை மீண்டும் கேளுங்கள். அவர் ஆலோசனை அல்லது பிரசங்கம் செய்யும்போது பெரும்பாலும் நடுத்தர வர்க்கங்கள் மற்றும் உயர் அடுக்கினரை மட்டுமே அணுகுவார். நமது பொருளாதாரம் பெரும் விலை கொடுக்கும் என்று அவர் கூறுகிறார்.
நகரங்களில் உள்ள சில திரு.ஷா அல்லது ஷர்மா அல்லது அகர்வால் பங்குச் சந்தைகளில் தங்களது பணத்தை தொலைக்கும்போது அதை மனதில் வைத்திருப்பார்கள். திடீரென தான் தெருவில் இருப்பதை உணரும் தினசரி கூலித் தொழிலாளி, பட்டினியால் வாடும் ஒருவர், காவல்துறையினரால் தள்ளிவிடப்பட்ட ஒருவர் தனது வீட்டிற்காக நீண்ட நடை பயணத்தை தொடங்கும் வரை பங்குச் சந்தை சரிவுகள் அர்த்தமற்றவையே.
மோடியின் அனைத்து துவக்கங்களையும் பாருங்கள்: கைகளை தட்டு, பிளேட், டார்ச், விளக்குகள். உங்கள் பால்கனிகள் அல்லது வராண்டாக்களுக்கு வாருங்கள். மோடியின் அரசியல் அதன் ஆறாவது ஆண்டில் மிகவும் கசப்பானதாகிவிட்டது. இது உண்மையான இந்தியாவுக்கான “பால்கனி வகுப்புகளை” குழப்புகிறது. இதில், குடியுரிமை நலச் சங்கங்கள் (RWA) என்ற பெயரில் நகர்ப்புற இந்தியாவின் உயரடுக்கு மக்களின் புதிய சர்வாதிகார அசிங்கங்கள், அவர்கள் புதிதாகக் கண்ட ஆணவத்தில் நியாயப்படுத்தப்படுகின்றன.
இப்போது, இந்தியாவில் எத்தனை வாக்காளர்கள் பால்கனிகளைக் கொண்ட வீடுகளை வைத்திருக்கிறார்கள்? எத்தனை பேருக்கு முறையான வீடுகள் உள்ளன? எத்தனை பேர்களின் தலைக்கு மேல் கசிவு இல்லாத கூரை இருக்கிறது? எத்தனை ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் குடும்பங்களிலிருந்து நூற்றுக்கணக்கான மைல்கள் தொலைவில் இருக்கிறார்கள்?, ஜன்னல்கள் இல்லாத தீப்பெட்டி அளவு சிறிய அறைகளில் 14 பேர் வசிப்பது எப்படி?
இரவு 7 மணிக்குப் பிறகு யாரும் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வரக்கூடாது என்று உள்துறை அமைச்சகம் கூறுகிறது. எத்தனை சதவீத இந்தியர்கள் தங்கள் வீடுகளுக்கு உள்ளேயும் வெளியேயும் இருப்பதைப் போன்ற வேறுபாட்டை உணர முடியும்? இந்த வெளியேற்றம் தொடங்கி 45 நாட்களாகிவிட்டன, இந்த மில்லியன் கணக்கான மக்களை மிகவும் முக்கியமான நபர்கள் ஒருவர்கூட அனுதாபத்துடன் சென்று சந்திக்கவில்லை. அனுதாபமே இல்லை என்பது போலவே தெரிகிறது.
அவை அந்தந்த மாநில அரசுகளின் பிரச்சினை. மிகவும் மதிப்புமிக்க இந்தியர்கள் பெரிய நகரங்களிலிருந்து நல்ல படியாக வெளியேற்றப்பட்டுள்ளனர் . அவர்கள் வைரஸை தங்கள் கிராமங்களுக்கு எடுத்துச் சென்றிருந்தால், நாம் என்ன செய்ய முடியும்? அவர்கள் அதை நன்றாக அறிந்திருக்க வேண்டும். நிச்சயமாக, மாநில அரசுகள் காவல்துறையைப் பயன்படுத்தி மனிததன்மை குறைவான தற்காலிக தனிமைப்படுத்தப்பட்ட முகாம்களில் அவர்களை தடுத்து வைக்க முயற்சிக்கும். ஆறு வாரங்களுக்குப் பிறகும், இன்னும் வீட்டிற்கு செல்லாமல் பாதியில் இருப்பவர்களுக்காக ஒரு சில ரயில்கள் ஏற்பாடு செய்யப்படும்போது கூட, மத்திய அரசு டிக்கெட்டுகளுக்கு பணம் செலுத்துவதற்காக மாநில அரசை நோக்கி கை காட்டுகிறது. குழப்பத்திற்கு யார் காரணம் என்று ஒருவரை ஒருவர் குற்றம் சொல்லிக் கொள்கிறார்கள்.
ஒரே இரவில் ஏழைகளை பணக்காரர்களாக மாற்ற முடியாது. நீங்கள் மில்லியன் கணக்கானவர்களை விமானங்களில் பறக்க வைக்க முடியாது. ஆனால் நாங்கள் கூறிய அந்த வார்த்தையை நினைவில் கொள்ளுங்கள்: பச்சாத்தாபம். இந்த மில்லியன் கணக்கானவர்களிடம் பாஜகவில் யார் பச்சாத்தாபத்துடன் பேசுகிறார்கள்? யாரேனும் ஒருவர் அவர்களைப் பற்றிய புரிதலுடன், அரவணைப்பு, ஆறுதல் ஆகியவற்றைக் கொடுக்கிறாரா? உத்தரபிரதேசம், ஜார்கண்ட் மற்றும் சத்தீஸ்கர் முதலமைச்சர்கள் மட்டுமே ஏதாவது செய்கிறார்கள். அவர்கள் தங்கள் அரசியல் உள்ளுணர்வை இழக்கவில்லை, மக்களின் துயரங்களுக்கு செவி சாய்க்கிறார்கள். நரேந்திர மோடிக்கு உள்ளுணர்வு இருக்கிறது என்பது நம்புவதற்கு கடினமாக இருக்கலாம்.
நன்றி:
Vande Bharat vs Bharat ke bande: Can Narendra Modi be losing his political touch so soon?