இருபத்தியோறாம் நூற்றாண்டின் தலைகள்
.
வாசற்படியில்
இரண்டுதலைகளை வெட்டி வைத்ததுபோல்
இருந்தன
அந்த இரண்டு ஹெல்மெட்டுகள்
ஒன்று என்னுடையது
இன்னொன்று அண்ணனுடையது
இனெ்றெப்படியோ
விபத்தில் சாகாமல்
உயிருடன் அலுவலகம் வந்தாயிற்று
இருபத்தோறாம் நூற்றாண்டில்
நிறைய வசதிகள் வந்துவிட்டன
நிறைய ஆபத்துகள் வந்துவிட்டன
நிறைய பாதுப்பாப்பு வழிமுறைகள் வந்துவிட்டன
எல்லாமே மனிதர்களுக்கானது
சந்தேகமில்லாமல்
மனிதர்களை சுற்றுகிறது பூமி
வெட்டப்பட்ட தலையென
இரண்டு ஹெல்மெட்டுகள் இருக்கின்றன
ஒன்று என்னுடையது
இன்னொன்று அண்ணனுடையது
மேலும்
எது பலிகொண்ட தலைகளாே
நம் கழுத்துக்கு மேலான தலைகள்
.
நிர்வாணக் கனவு
.
வழக்கமான கனவல்ல அது
கனவிலும் வழிதவறிவிட்டேன்
திரும்பிப்போகும் பாதைகள் மறந்துபோயின
வந்த இடத்திற்கே வந்துகொண்டிருந்தேன்
தொடங்கிய இடங்கள் முடிவற்றதாக இருந்தன
கனவில் தென்பட்ட
ஒரு நதிக்கரையில்
நடக்கிறேன்
நதிக்கரையோரத்து வீடுகள் தென்படுகின்றன
ஒவ்வொரு வீடாக துலங்குகின்றன
கனவுதான் அந்த வீடுகளை
கட்டுகிறது
ஒருவீட்டில்
நேபாள பெண் ஒருத்தி
சுவரில் நிர்வாணமாக சாய்ந்தபடி சிகரெட் பிடிக்கிறாள்
அவளது கண்களைப் பார்க்கிறேன்
கருவிழியற்ற பெரிய கண்கள்
நகர்கிறேன்
அடுத்தவீட்டில்
ஒல்லியான ஒரு இளம்பெண்
அவளது சிறிய முலைகளில்
பளார் பளார் என அறைந்துகொண்டிருந்தார் ஒருவர்
அவர் என்னை பார்த்ததும்
முறைத்தார்
கனவில் திரையை இழுத்துவிட்டார்
நகர்கிறேன்
அடுத்த வீடு தோன்றுகிறது
தடிமனான ஆள் ஒருவர்
தடிமனனான தனது பெண்ணை நிர்வாணப்படுத்திக்கொண்டிருந்தார்
எனக்கு இந்தக் கனவிலிருந்து தப்பித்தால் போதும் என்றிருந்தது
வலியும் அவமானமும்
நிர்வாணமாய் அசைய
நான் திரும்பிப்போகும் பாதைகள் மறந்து போயின
.
விலகா கரங்கள்
.
திருப்பூரில்
வழக்கமான வேலைநாள்
சாலையில் இருவர்
கைகோர்த்தபடி
எதையோ பேசியபடி
சிரித்துக்கொண்டு
நடப்பதை பார்த்தேன்
வழக்கமான கணவன் மனைவியர் அவர்கள் அல்ல என்று தோன்றியது
காதலைத் தவிர
வேறெதெனாலும்
அந்தக் கைகளை
இப்படி பற்ற முடியாது என்று தோன்றியது
சட்டென
கோர்த்து விலகிய
காதலின் கரங்களை நினைத்துக்கொண்டேன்