ஜி.வி. பிரகாஷ் நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது. காமெடி எண்டெர்டைனர் வகையில் உருவாகும் இதனை எழில் இயக்குகிறார்.
பார்த்திபனுடன் ஜி.வி. பிரகாஷ் இணைந்து நடித்திருக்கும் ‘குப்பத்து ராஜா’ இந்த வாரம் வெளியாகிறது. இதனை தொடர்ந்து ‘ஐங்கரன்’, ‘வாட்ச்மேன்’, ‘ஜெயில்’ ஆகிய திரைப்படங்களில் நடிக்கிறார் ஜி.வி. பிரகாஷ்.
அதுமட்டுமின்றி, வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ‘அசுரன்’ திரைப்படத்துக்கு இசையமைக்கும் பொறுப்பையும் ஜி.வி. பிரகாஷ் ஏற்றிருக்கிறார்.
எழில் இயக்கத்தில் ஜி.வி நடிப்பது ஏற்கனவே உறுதியாகியிருந்த நிலையில், அதன் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது.