இலங்குவளை நெகிழச் சாஅ யானே
உளெனே வாழி தோழி சாரல்
தழையணி அல்குல் மகளி ருள்ளும்
விழவுமேம் பட்டவென் நலனே பழவிறற்
பறைவலந் தப்பிய பைதல் நாரை 5
திரைதோய் வாங்குசினை யிருக்கும்
தண்ணந் துறைவனொடு கண்மா றின்றே.
அழகான ஒரு கடல்கரை.
அந்தக் கடல்கரையில் ஒரு மரம் இருக்கிறது.
அந்த மரம் குட்ட மரம். அதன் கிளைகள் தாழ்ந்து தாழ்ந்து தரையைத் தொட்டுக்கொண்டிருக்கிறது.
அவைகள் அந்த மரத்தை ஓயாமல் நனைத்துக் கொண்டிருக்கிறது.
ஒரு நாரை அந்த மரத்தில் உட்கார்ந்திருக்கிறது.
அந்த நாரைக்கு வயதாகிவிட்டது. வயதான அந்த நாரையால் பறக்க முடியவில்லை. அதன் இறகுகள் பறக்கும் வலிமையை இழந்துவிட்டது.
அந்த நாரை வயோதிகத்தின் இயலாமையை நினைத்து நினைத்து வருத்தத்தோடு உட்கார்ந்திருக்கிறது.
-அம்மூவனார்
குறுந்தொகை 125