புனவன் துடவைப் பொன்போற் சிறுதினை
கிளிகுறைத் துண்ட கூழை யிருவி
பெரும்பெய லுண்மையி னிலையொலித் தாங்கென்
உரஞ் செத்தும் உளெனே தோழியென்
நலம்புதி துண்ட புலம்பி னானே. 5

ஒரு சிறிய விவசாயி.

அந்தச் சிறிய விவசாயி அவர் நிலத்தில் தினை விதைத்திருக்கிறார். தினைப் பயிர்கள் அழகாகக் கதிர்வாங்கிக் கொண்டு நிற்கின்றன. அந்தத் தினைக் கதிர்கள் தகதகன்னு தங்கநிறத்தில் அழகாக நிற்கின்றன.

கிளிகள் அந்தத் தினைக்கதிர்களைக் கொத்திக்கொண்டு போகிறது.

அந்தத் தினைப் பயிர்கள் கதிர்கள் இல்லாமல் மொட்டையாக வெறும் தட்டைகள் மட்டும் நின்று கொண்டிருக்கிறது.

அந்தத் தினைக்காட்டில் பெரிய மழை பெய்தது.

தினைக்காடு குளிர நனைந்தது.

கதிர்களை இழந்த அந்தத் தினைத் தட்டைகள் பச்சைப்பசேல் என்று அழகாகத் தளிர்த்துக் கொண்டிருக்கிறது.

-உறையூர் முதுகண்ணன் சாத்தனார்
குறுந்தொகை 133