”என்.ஜி.கே” இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு தேதி இன்று(ஏப்ரல் 25) அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு நிகழ்ச்சி வருகின்ற ஏப்ரல் 29-ஆம் தேதி நடைபெறுமென இதன் தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர்ஸ் பிக்ச்சர்ஸ் அறிவித்துள்ளது.

செல்வராகவன் இயக்கத்தில் உருவாகியுள்ள என்.ஜி.கே திரைப்படத்தில் சூர்யா, சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இதற்கு இசையமைத்துள்ளார்.

ஏற்கனவே, ”என்.ஜி.கே” டீஸர் மற்றும் ”தண்டல்காரன்” சிங்கள் டிராக் பாடல் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றிருக்கிறது.