அஜித் நடிக்கும் ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படத்தை இயக்கிவரும் வினோத் தான் ‘அஜித் 60’ படத்தையும் இயக்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.

‘பிங்க்’ திரைப்படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகி வருகிறது ‘நேர்கொண்ட பார்வை’. யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தை ஆகஸ்ட் மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கும் இப்படத்தை தொடர்ந்து அஜித் நடிக்கும் அடுத்த படம் குறித்து பல்வேறு தகவல்கள் வந்தன. இந்நிலையில், அதனையும் போனி கபூர் தயாரிக்க வினோத் இயக்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.