பாண்டிராஜ் இயக்கத்தில் மீண்டும் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள ‘எஸ்.கே 16’ படத்தின் ஒளிப்பதிவாளராக நீரவ் ஷா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
ராஜேஷ்.எம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் ‘மிஸ்டர் லோக்கல்’ திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இதன் பின்னர் பி.எஸ். மித்ரன், ‘இன்று நேற்று நாளை’ ரவிக்குமார் ஆகியோரது படத்தில் எஸ்.கே நடிக்கிறார்.
ஏற்கனவே தொடங்கப்பட்ட இந்தப் படங்களுக்குப் பிறகு மீண்டும் பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது.
இதன் முக்கியப் பாத்திரம் ஒன்றில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கவுள்ளார். இப்போது இதன் ஒளிப்பதிவாளராக நீரவ் ஷா இணைந்திருக்கிறார்.