நேர்த்தியான திரைக்கதை, நெருப்பு தெறிக்கும்படி தரையை உரசி செல்லும் வேகமான கார் பந்தயங்கள், பறக்கவிடும் சண்டைக்காட்சிகள் என கடந்த பல பாகங்களில் ரசிகர்களின் கவனம் பெற்ற ஃபாஸ்ட் அண்ட் ஃபூரியஸ் திரைப்படம் அடுத்தப் பாகம் வெளிவர விருக்கிறது.
ஃபாஸ்ட் அண்ட் ஃபூரியஸ் அடுத்த பாகத்தில் WWE ஸ்டார் ஜான் சீனா நடிக்கப்போவதாக வின் டீசல் தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இதுபற்றி படத்தின் தயாரிப்பாளர் வின் டீசல் டிவிட்டர் விடியோவில் “உங்களுக்குத் தெரியும் நான் விரைந்து சில முடிவுகள் எடுப்பேன் என்று இப்போது என் நண்பன் பால் வாக்கர் எனக்காக ஒருவரை அனுப்பியுள்ளான் என்று சொல்லி முடித்தவுடன் சில நிமிடங்களில் ஜான் சீனா திரையில் தோன்றினார். தொடர்ந்து எங்களுடன் ஜான் சீனா இருப்பார் என்று அவர் கூறினார்.