‘ஜெயம் ரவி 25’ திரைப்படத்தின் நாயகியாக டாப்ஸி நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது ‘கோமாளி’ படத்தில் நடித்துவரும் ஜெயம் ரவி, அடுத்து தனது 25-வது படத்தில் நடிக்கிறார். இதனை ரோமியோ ஜூலியட், போகன் ஆகிய படங்களை இயக்கிய லக்ஷ்மன் இயக்குகிறார்.
டி. இமான் இதற்கு இசையமைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில்தான் ‘ஜெயம் ரவி 25’ திரைப்படத்தின் நாயகியாக டாப்ஸி நடிக்கிறார் என கூறப்படுகிறது.
இதேபோல், சண்டைக் காட்சி இயக்குநர் ஸ்டன்ட் சிவா மற்றும் அவரது மகன் நடன இயக்குனர் கெவின் ஆகியோர் இப்படத்தில் இணைந்து பணியாற்றவுள்ளார்.