தூங்கல் ஓலை ஓங்கு மடற் பெண்ணை
மா அரை புதைத்த மணல் மலி முன்றில்,
வரையாத் தாரம் வரு விருந்து அயரும்
தண் குடி வாழ்நர் அம் குடிச் சீறூர்
இனிது மன்றம்ம தானே- பனி படு 5
பல் சுரம் உழந்த நல்கூர் பரிய,
முழங்கு திரைப் புது மணல் அழுந்தக் கொட்கும்,
வால் உளைப் பொலிந்த, புரவித்
தேரோர் நம்மொடு நகாஅ ஊங்கே.

 

எங்க ஊரு சின்ன ஊரு.

எங்க ஊர்ல ஒரு பெரிய கடல் இருக்கிறது.

எங்க ஊர்ல எந்தப் பக்கம் திரும்பினாலும் மரங்களாத்தான் இருக்கும்.

எங்க ஊர்ல கடல் காற்று எப்பமும் வீசிக்கிட்டேருக்கும்.

எங்க ஊரு எப்பமும் குளிர்ச்சியாருக்கும்.

எங்கள் முற்றத்தில் ஒருபனை மரம் இருக்கிறது. காற்று, குருத்து மண்ணைக் கொண்டாந்து கொட்டிக் கொட்டி பனை மரம் மண்ணில் புதைந்துவிட்டது.

எங்கள் பனைமரத்தில் கா ஓலைகளும் சார ஓலைகளும் கருக்கு மட்டைகளோடு ஓலைகள் அழகாகத் தொங்கிக் கொண்டிருக்கின்றன.

எங்கள் பனை மரத்தில் குருத்து ஓலைகள் வானத்தை நோக்கிக் கம்பீரமாக நீட்டிக் கொண்டிருக்கிறது.

எங்கள் வீடு பணக்கார வீடு.

எங்களுக்கு வருமானம் வந்துக்கிட்டேருக்கும்.

சொத்து எங்களுக்கு சேர்ந்துக்கிட்டேருக்கும்.

எங்களுக்கு ‘இவ்வளவு சொத்து இருக்கு’ என்று குத்து மதிப்பாக்கூட யாராலேயும் சொல்ல முடியாது.

எங்க வீட்டுக்கு எப்பமும் விருந்தாளுக்க வந்துக்கிட்டேருப்பாக…

எங்கள் விருந்தாளுக்களோடு எங்கள் முற்றத்தில் உட்கார்ந்து நாங்கல் கூட்டாஞ் சோறு சாப்பிடுவோம். எங்கள் விருந்தாளுக்களோடு பேசிக்கிட்டும் சிரிச்சிக்கிட்டும் கூட்டாஞ்சோறு சாப்பிடுவது மகிழ்ச்சி. யாருக்கும்.

எங்கள் சொந்தக்காரர்கள் ரொம்பப் பாசமாருப்பாக.

எங்கள் வீட்டில் விளைந்து கிடக்கிற பண்டங்களை நாங்கள் எங்கள் விருந்தாளுக்களுக்குப் பெட்டி பெட்டியா அள்ளிக் கொடுப்போம். விருந்தாளுக்களுக்குப் பெட்டி பெட்டியா ரெண்டு கைட்டும் அள்ளிக் கொடுக்கும் போது ரொம்ப மகிழ்ச்சியாருக்கும்.

எனக்கு எங்க ஊர் பிடிக்கும்.

தூங்கல் ஒரியார்
நற்றிணை 135