மே 23-ல் இந்திய மக்களவைத் தேர்தல் முடிவுகளால் பங்குச் சந்தையில் ஒரு வலுவான துவக்கத்தோடு தொடங்கியுள்ளது.

300 க்கும் மேற்பட்ட இடங்களில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கம் முன்னிலை பெற்று இன்னும் ஐந்து ஆண்டுகளுக்கு தங்களது அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ளும் என்று எதிர்பார்ப்பால் நிப்டி 11,950 புள்ளிகளும் சென்செக்ஸ் 740 புள்ளிகளும் அதிகரித்துள்ளது.சென்செக்ஸ் 539.05 புள்ளிகள் உயர்ந்து  39649.26 புள்ளிகளாகவும், நிஃப்டி 156.00 புள்ளிகள் உயர்ந்து  11893.90 புள்ளிகளாகவும் உள்ளது.

821 பங்குகளின் விலை முன்னேற்றம் கண்டுள்ளது, 118 பங்குகளின் சரிவும், 17 பங்குகளில் மாறாமலும் உள்ளன.300 க்கும் அதிகமான இடங்களில் தேசிய ஜனநாயகக் கூட்டணி முன்னிலை வகிக்கும் முன்னதாக தொடக்க நேரத்திற்குப் பிறகு சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி அதிகபட்சமாக 40ஆயிரம் புள்ளிகளை கடந்து ஒரு புதிய    சாதனைகளைத் தொட்டது.

மேலும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பொதுத் தேர்தலுக்கான முடிவுகளால்  அதானி குழு மற்றும் அனில் திரூபாய் அம்பானி குழும பங்குகளின் விலை அதிகரித்தது.அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாயானது  டாலருக்கு எதிராக ரூபாய் மதிப்பு 29 பைசா உயர்ந்து 69.38 ஆக உயர்ந்தது.

எஸ் பேங்க் அதானி போர்ட் இந்தஸ்இந்த் வங்கி, இந்தியாபுல்ஸ் ஹவுசிங் பைனான்ஸ்  ஜீ, பிரிட்டானியா, ஆர்.ஐ.எல்., சன் டி.வி., பேங்க் ஆஃப் பரோடா, இந்தியா சிமெண்ட்ஸ் மற்றும் பி.இ.எம்.எல். போன்ற பங்குகள் விலை உயர்ந்துள்ளது.அஜந்தா பார்மா வெசிகேர்  அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தில் இருந்து ஒப்புதல் பெற்றுள்ளது.மார்ச் காலாண்டில் பங்குச் சந்தைகள் பலவீனமான வருவாய் இருந்தபோதிலும், இந்தஸ்இந்த் வங்கி பங்குகள் மே 23 ம் தேதி வரை 5 சதவிகிதம் உயர்ந்தது.

மார்ச் 2019 ஆம் ஆண்டு முடிவடைந்த காலாண்டில் நிறுவனத்தின் இழப்புக்களை ஈடு செய்யும் விதமாக  மே 23 ம் தேதி பாங்க் ஆஃப் பரோடாவின் பங்குகள் கிட்டத்தட்ட 10 சதவிகிதம் உயர்ந்தது .எச்.டி.எஃப்.சி வங்கி  1: 2 என்ற விகிதத்தில் வங்கியின் ஈக்விட்டி பங்குகளை பிரிக்க  ஒப்புதல் அளித்துள்ளது.பேங்க் ஆஃப் பரோடா மார்ச் மாத காலாண்டில்  ரூ. 991 கோடி நஷ்டத்தை சந்தித்து வருகிறது .

பொதுத்துறை வங்கியான பாங்க் ஆஃப் பரோடா  கடந்த ஆண்டின் இதே காலாண்டில் 3,102 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் நிகர இலாபம் குறைந்து வருவதால், டெக் மஹிந்த்ராவின் கிரெடிட் சூஸெஸ் மற்றும் CLSA ஆகியவற்றின் மதிப்பீட்டைப் பொறுத்தவரையில் பல்வேறு வர்த்தக நிபுணர்களால் இந்த நிறுவனத்தின் பங்குகளை வாங்க பரிந்துரைக்கப்படுகிறது.

ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் ஏப்ரலில் பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்து 93.7 சதவீதமாக உயர்ந்துள்ளது.  20 புதிய உள்நாட்டு விமானங்களை அறிமுகப்படுத்தியுள்ளன. அவைகளில் 18 வழித்தடங்கள்  மெட்ரோ மற்றும் நான்மெட்ரோ நகரங்களுடன்  இணைக்கின்றன.ஜேகே லக்ஷ்மி சிமெண்ட் மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் ரூ. 43.25 கோடி உயர்ந்து நிகர லாபம் 27.80 சதவிகிதமாக  அதிகரித்துள்ளது.