காணினி வாழி தோழி யாணர்க்
கடும்புன லடைகரை நெடுங்கயத் திட்ட
மீன்வலை மாப்பட் டாஅங்
கிதுமற் றெவனோ நொதுமலர் தலையே.
ஒரு பெரிய குளம்.
அந்தப் பெரிய குளத்தில் தண்ணீர் கெத்துக்கெத்தென்று கெட்டிக் கிடக்கிறது.
அந்தப் பெரிய குளத்தின் கரைகள் உயரமாக இருக்கிறது. அகலமாகவும் இருக்கிறது அந்தக் கரைகள். அந்தக் குளத்தின் கரைமண் இறுகி கரைகள் உறுதியாக இருக்கிறது.
ஆழமான அந்தக் குளத்தில் மீன்கள் தண்ணீருக்கு மேலே வந்து விளையாடிக் கொண்டிருக்கின்றன.
ஒரு தாத்தா அந்த மீன்களைப் பிடிப்பதற்காக அந்தப் பெரிய குளத்தில் வலை விரித்திருக்கிறார்.
மிதப்புக் கட்டைகள் தண்ணீருக்கு மேலே மிதந்து கொண்டிருக்கின்றன.
தாத்தா கண்கள் மிதப்புக்கட்டைகளையே பார்த்துக் கொண்டிருக்கிறது.
தாத்தா கண் எதிரில் வலை தண்ணீரில் மூழ்கிக்கொண்டிருக்கிறது.
தாத்தா தண்ணீரில் குதிக்கிறார். தாத்தா தண்ணீரில் மூழ்கி வலையைத் தூக்கிக்கொண்டு வருகிறார்.
அவர் ஆசையோடு வலையைப் பார்க்கிறார்.
அவர் வலையில் ஒரு மீன் கூட இல்லை.
அவர் வலையில் அகப்பட்டிருப்பது ஒரு நீர் நாய்.
-பூங்கண்ணுத்திரையார்
குறுந்தொகை 171