பிரான்சு தலைநகர் பாரிஸில், பெண்கள் உலக கோப்பை கால்பந்து தொடர்  நேற்று (8.06.2019) தொடங்கியது. முதல் முறையாக சிலி, ஸ்காட்லாந்து, தென் ஆப்பிரிக்கா ஜமைக்கா என 24 நாடுகள்  இதில் பங்கேற்றுள்ளது.

பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து தொடரின் முதல் போட்டியில் தென் கொரியாவுக்கு எதிரான பிரான்ஸ் அணி 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. 6 பிரிவுகளில் மூன்றாவது இடம்பிடித்த அணிகளில் ‘ரேங்கிங்’ அடிப்படையில் முதல் நான்கு இடம் பிடிக்கும் அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறும். இப்போட்டிகளின் இறுதி ஆட்டம் வருகிற ஜூலை 7இல் நடக்கிறது.

முதல் போட்டியில் துவக்கம் முதலே பிரான்ஸ் அணியின் ஆதிக்கம் அதிகம் இருந்தது. இதில் பிரான்ஸ் அணி சார்பில் லே சோமர் (9வது நிமிடம்), ரெனார்டு (35, 45+2) 3 கோல்கள் அடித்தனர். இதற்கு முதல் பாதியில் தென் கொரிய அணியால் பதிலடி கொடுக்க முடியவில்லை.

பின் பரபரப்பாக நடந்த இரண்டாவது பாதியிலும் ஆதிக்கத்தை தொடர்ந்த பிரான்ஸ் அணிக்கு ஹென்ரி 85வது நிமித்தில் ஒரு கோல் அடித்தார். இதற்கு பதிலடி கொடுக்க முயன்ற தென் கொரிய அணியால் கடைசிவரை கோல் எதுவும் அடிக்க முடியவில்லை. இறுதியில் பிரான்ஸ் அணி, தென் கொரிய அணியை 4-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.